பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் இயான் ஃபிளெமிங் என்பவரால் 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உளவாளி கதாபாத்திரம் இந்த ஜேம்ஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயரை ஃபிளெமிங் தேர்வு செய்தததற்கான காரணம் மிகவும் சுவையானது. ஜேம்ஸ் பாண்ட் அமெரிக்காவைச் சேர்ந்த பறவைகள் ஆய்வாளர் ஆவார்.
நாம் பார்ப்பதுபோல் அவர் சாகசங்கள் செய்யும் உளவாளி கிடையாது. கரீபியன் பகுதியில் பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த இந்த ஜேம்ஸ் பாண்ட்டின் பல ஆய்வுக் கட்டுரைகளை ஃபிளெமிங் படித்திருக்கிறார்.
ஃபிளெமிங், தான் எழுதிய கதையின் கதாநாயகனின் பெயர் மிகச் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால், சாதுவான ஒருவரான ஜேம்ஸ் பாண்ட் என்பவரின் பெயரைத் தேர்வு செய்துள்ளார்.
முதல் ஜேம்ஸ் பாண்ட்
டாக்டர் நோ (1962) திரைப்படத்தில் பாண்டாக நடித்த முதல் நடிகர் சீன் கானரி. ஒரு ஸ்காட்லாந்து பாடிபில்டர், அவர் 1950 களின் பிற்பகுதியிலிருந்து பிரிட்டிஷ் படங்களில் தோன்றிய பிறகுதான் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்திற்கு வந்தார்.
ஜார்ஜ் லேசன்பி:
1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டுவரை ஜேமஸ் பாண்டாக இருந்த சீன் கானரி, படத்திலிருந்து விலகிய பிறகு யாரை பாண்டாக நடிக்கவைப்பது என படக்குழுவினர் தேடி வந்தனர்.
அப்போது, 'ஒன் ஹேர் மேஜஸ்ட்டி சீக்ரெட் சர்வீஸ்' படத்தின் தயாரிப்பாளர், ஜார்ஜ் லேசன்பியா என்பவரை முடி திருத்தும் கடையில் பார்த்துள்ளார். பின்னர் அவரை அழைத்து டெஸ்ட் ஷூட் செய்து பார்த்ததில் அவரை பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தனர்.
படப்பிடிப்பு நடைபெற்றபோது, தயாரிப்பாளர் அவரை மூளை இல்லை எனத் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் தொடர்ந்து பாண்ட் படத்தில் நடிக்கவில்லை என கூறி படத்திலிருந்து விலகினார்.
ரோஜர் மூர் பயணம்:
நடிகர் ரோஜர் மூர் 1973 முதல் 1985 வரை லைவ் அண்ட் லெட் டை (1973), தி மேன் வித் தி கோல்டன் கன் (1974), தி ஸ்பை ஹூ லவ் மீ (1977) ), மூன்ராக்கர் (1979), ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1981), ஆக்டோபுஸி (1983), எ வியூ டு எ கில் (1985) என 7 படங்களில் நடித்து நீண்ட கால ஜேம்ஸ் பாண்டாக இருந்துள்ளார். கோல்டன் ஐ படத்திற்கு முன்பு, அதுவரை வந்த படங்களிலேயே மூன்ராக்கர் படம்தான் அதிக வசூலை பெற்றது.
திமோதி டால்டன்:
தி லிவிங் டயலைட்ஸ் (1987), லைசென்ஸ் டு கில் (1989) ஆகிய இரண்டு படங்களில் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் திமோதி டால்டன். இவரது நடிப்பு விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை குவிக்கவில்லை. 1984ஆம் ஆண்டு முதல் 1994வரை இவர்தான் ஜேம்ஸ் பாண்டாக இருந்தார்.
பியர்ஸ் ப்ரோஸ்னன்:
கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், த வேர்ல்ட் இஸ் நாட் இனஃப், டை அனதர் டே ஆகிய 4 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் பியர்ஸ் ப்ரோஸ்னன்.
டை அனதர் டே படத்தில் இவர் பயன்படுத்திய கார் மறைய கூடியதாக இருந்தது. இயற்கையே வில்லன் கையில் இருந்ததை ஜேம்ஸ் பாண்ட் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதையாகும்.
டேனியல் கிரேக்:
'கேசினோ ராயல்' படம் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் டேனியல் கிரேக். இவரது முதல் படமே மெகா ஹிட் அடித்தது. விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனையைப் படைத்தது. அதாவது அதுவரை வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே இந்தப் படம் அதிகமான வசூலை வாரிக் குவித்தது.
தொடர்ந்து இவர் 'குவாண்டம் ஆஃப் சோலஸ்', 'ஸ்கைஃபால்', 'ஸ்பெக்டர்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில், கடைசியாக நடித்துள்ள 'நோ டைம் டு டை' படம் சமீபத்தில் வெளியானது. ஜேம்ஸ் பாண்டாக இவர் நடித்துள்ளது இதுவே கடைசி என்பதால், வழக்கத்திற்கு மாறாக தனது நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்.
ஜேம்ஸ் பாண்ட் ஸ்டண்ட் பதிவுகள்
ஒவ்வொரு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திலும் நடக்கும் அற்புதமான சாகசங்களுக்கு காரணம், அப்படத்தின் ஸ்டண்ட் குழுவினர்தான். அவர்கள் அனைவரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், அதனால்தான் வேறு யாரும் எடுக்க முடியாத காட்சிகளை இவர்களால் எடுக்க முடிகிறது. உதாரணமாக, கேசினோ ராயல் படத்தில் ஆஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் என்ற கார் புரளும் எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனை.
குறுகிய மற்றும் மிக நீளமான பாண்ட் படம்
குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008) இன்றுவரை மிகக் குறுகிய நேரம் (107 நிமிடங்கள்) கொண்ட ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமாகும்.
"நோ டைம் டு டை" என டேனியல் கிரேக்கின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்பட ஸ்வான் பாடல், நீண்ட பாண்ட் திரைப்படம் என்பதால் நீண்ட விடைபெறப் போகிறது.
வசூல் வேட்டையாடிய பாண்ட் படங்கள்
தண்டர்பால் திரைப்படம் மிகவும் வெற்றிகரமான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் - பணவீக்கத்திற்குப் பிறகு உள்நாட்டு வருவாயைப் பொறுத்தவரை 2020 நிலவரப்படி, இது 590 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளது. அதைத் தொடர்ந்து கோல்ட் ஃபிங்கர் திரைப்படம் 514.7 மில்லியன் டாலரும், ஸ்கைஃபால் திரைப்படம் 358.3 மில்லியன் டாலரும் வசூல் செய்துள்ளது.
உலகளாவிய வருவாயைப் பொறுத்தவரை ஸ்கைஃபால் திரைப்படம் மிக அதிக பணம் சம்பாதித்த பாண்ட் படமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. இப்படமானது உலகின் மிக வெற்றிகரமான திரைப்படங்களின் பட்டியலில் 28ஆவது இடத்தில் உள்ளது.