பாலிவுட்டில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஜோடியாக உள்ளவர்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங். கடந்த 2018 ஆண்டு பாரம்பரிய முறைப்படி இத்தாலி நாட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
'ராம் லீலா', 'பாஜிராவ் மஸ்தானி', 'பத்மாவத்' ஆகிய படங்களில் தோன்றிய இந்த ஜோடி, மீண்டும் '83' என்ற படத்தில் நடித்துள்ளனர். அதில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்திருக்கிறார். அவரது மனைவி ரோமி பாத்தியா கதாபாத்திரத்தில் தீபிகா நடித்துள்ளார்.
இதனிடையே இந்த ஜோடி தங்களது விடுமுறைக்காக வெளிநாட்டுக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். காதலர் தினம் நெருங்குவதையொட்டி, வெளிநாட்டுக்கு பயணித்துள்ள தீபிகா, ரன்வீர் தங்களது பாஸ்போர்ட்டுகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அதில் எந்த நாட்டுக்குச் செல்கின்றனர் என்பது பற்றி குறிப்பிடவில்லை. இது தொடர்பான கூடுதல் விவரத்தை விரைவில் ரசிகர்களுக்குத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
கடந்த மாதம் தீபிகா நடிப்பில் 'சப்பாக்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ஆசிட் வீச்சு பாதிப்புக்குள்ளான லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.
'பிரித்விராஜ்' பட ஷுட்டிங் அனுபவம் குறித்து பகிர்ந்த மனுஷி சில்லர்