சமீபத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய இந்தியாவின் 'பிக் பி' அமிதாப் பச்சன், ஐந்து கிலோ வரை தனது உடல் எடையைக் குறைத்துள்ளதுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தனக்கு உத்வேகத்தை அளிப்பதாகவும், புத்துணர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ப்ளாகில் பதிவிட்டுள்ள அவர், உணவுக்கட்டுப்பாடு முறைகள் பற்றியும், ஓய்வு பற்றியும் விவரித்துள்ளார். தனது குடும்ப அங்கத்தினர் தன் மீது செலுத்தும் அக்கறை, பாசம் தனக்கு புதிய ஊக்கத்தை அளித்துள்ளதாகவும், தொடர்ந்து 'கோன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியில் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்க வந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் கடந்த 15ஆம் தேதி மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதாகவும், அதன் காரணமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி சிகிச்சை முடிந்து அமிதாப் பச்சன் வீடு திரும்பினார்.
இந்தியில் ஷோலே, டான், பிளாக், பிங்க் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அமிதாப் பச்சனுக்கு சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
அடுத்ததாக அமிதாப் நடிப்பில், ப்ரம்மாஸ்திரா, குலாபோ சிதாபோ மற்றும் ஜுந்த் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித் பட நாயகியா இது? - உடல் பருமனுக்கு குட் பை சொல்லி சாதனை