பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் 2018ஆம் ஆண்டுமுதல் புற்றுநோயுடன் போராடிவந்தார். அதற்கான சிகிச்சையையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டுவந்தார். இந்த நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் 29ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து இர்ஃபான் கானின் முதலாமண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாலிவுட் பிரபலங்கள் பலர் அவர் நினைவாக சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
அந்தவகையில், இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "கீமோ உங்களை உள்ளிருந்து எரித்துக்கொண்டிருக்கிறது. எனினும் நீங்கள் மாசற்ற மகிழ்ச்சியுள்ளவராக வாழ்ந்தீர்கள்.
நீங்கள் எனக்கு மிகச் சிறந்த நண்பர், தோழர், சகோதரர், தந்தை. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் எப்போதும் ஆர்வமுடனும் சுறுசுறுப்புடனும் இருந்தீர்கள்" என உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும் இர்ஃபான் கான் கீமோதெரப்பியின்போது எடுத்த புகைப்படத்தையும் அவரது கைப்பட எழுதிய கடிதத்தையும் பாபில் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.