ETV Bharat / sitara

ஷில்பா ஷெட்டி குடும்பத்தினருக்கு கரோனா பாதிப்பு - ஷில்பா குடும்பத்தினருக்கு கரோனா

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியை தவிர்த்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Shilpa Shetty'
Shilpa Shetty'
author img

By

Published : May 7, 2021, 8:01 PM IST

இந்தியாவை உலுக்கி வரும் கரோனா இரண்டாவது அலையில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், நடிகை ஷில்பா ஷெட்டி தன்னை தவிர தனது கணவர், குழந்தைகள், மாமானர், மாமியார், அம்மா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, "கடந்த பத்து நாட்கள் எங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. என் மாமானார் மாமியார் இருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து சமிஷா, வியான் ராஜ், என் அம்மா, கடைசியாக ராஜ் என அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அனைவரும் வீட்டுத்தனிமையில், அவரவர் அறையில் உள்ளனர். மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி வருகிறோம் வீட்டுப் பணியாளர்கள் இருவருக்கும் கூட தொற்று உறுதியானது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடவுளின் அருளால் அனைவரும் தேறி வருகின்றனர். எனக்குத் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. விதிகளின் படி அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உடனடியாக உதவி செய்த மும்பை மாநகராட்சி, அதன் அலுவலர்களுக்கு நன்றி.

உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து எங்களை உங்கள் பிரார்த்தனையில் வைத்திருங்கள். தயவு செய்து முகக் கவசம் அணியுங்கள், கிருமிநாசினி பயன்படுத்துங்கள், பாதுகாப்பாக இருங்கள். கரோனா தொற்று இருக்கிறதோ, இல்லையோ நீங்கள் மனரீதியில் நேர்மறைச் சிந்தனையோடு இருங்கள்" என்று கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டி ராஜ்குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2012ஆம் ஆண்டு பிறந்த ஆண்குழந்தைக்கு வியான் ராஜ் என பெயர்வைத்தனர். அதன் பின் இந்த தம்பதிக்கு 2020ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் பிறந்த பெண் குழந்தைக்கு சமிஷா என்று பெயர் வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.