ETV Bharat / sitara

இவங்களுக்கு இதே பழக்கமா போச்சு...சோனம் கபூருக்கு தோள் கொடுத்த பூஜா ஹெக்டே - பிரிட்டீஷ் ஏர்வேஸ் சேவை குறித்து சாடிய சோனம் கபூர்

பாலிவுட் நடிகை சோனம் கபூர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை சமூக வலைதளத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

Sonam Kapoor
Sonam Kapoor
author img

By

Published : Jan 10, 2020, 7:58 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர், தனுஷ், துல்கர் சல்மான் என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமா மட்டுமில்லாது பேஷன் ஆடைகள், ஆபரணங்கள், மேக்கப் பொருட்கள் என லேட்டஸ்ட் விஷயங்களை பாலிவுட்டினருக்கு அறிமுகப்படுத்தி ட்ரெண்ட் செட்டராக இருந்துவருகிறார். அதே போல் சமூக வலைதளப்பக்கத்திலும் கருத்துகளை பதிவிட்டு ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

Sonam Kapoor
சோனம்கபூர் ட்வீட்

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இந்த மாதம் மட்டும் மூன்று முறை பயணம் செய்துள்ளேன். இதில் இரண்டு முறை எனது லக்கேஜ்ஜை இழந்துவிட்டேன். இனி பிரிட்டடிஷ் ஏர்வேஸை பயன்படுத்தக்கூடாது என்று இதிலிருந்து பாடம் கற்றுள்ளேன் என்று பதிவிட்டு அந்த விமான நிறுவனத்துக்கும் டேக் செய்திருந்தார்.

அவரின் இந்த பதிவுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், லக்கேஜ் தாமதத்திற்கு மன்னிக்கவும். இது குறித்து விமான நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்போது உங்களுக்கு டிராக்கிங் ரெஃப்ரன்ஸ் வழங்கப்பட்டது என அவருக்கு ரீ டிவீட் செய்திருந்தது.

அதற்கு சோனம், கோபத்துடன் ஆமாம். எல்லாம் முடிந்து விட்டது. இனி நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மோசமான நிர்வாக செயல்பாட்டை வெளிபடுத்தியுள்ளது என்று பதிலளித்துள்ளார்.

இவரின் இந்த பதில் ட்வீட்டை ஆமோதிக்கும் விதமாக நடிகை பூஜா ஹெக்டேவும் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த மாதம் எனது இரண்டு லக்கேஜ்களையும் தொலைத்துவிட்டு பின் கூரியர் மூலம் அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு இது வாடிக்கை போல என்று ட்வீட் செய்திருந்தார்.

இதையும் வாசிங்க: உங்க உப்புல ஐயோடின் குறைவா இருக்கு - சைவ பிரியர்களுக்கு சோனம் கபூர் அலர்ட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.