ஹைதராபாத்: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ரித்திக் ரோஷன் - தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் ‘ஃபைட்டர்’ படத்தின் பட்ஜெட் 250 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி ரித்திக் ரோஷன் பிறந்தநாள் அன்று அவரது ‘ஃபைட்டர்’ படம் குறித்து அறிவிப்பு வெளியானது. இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதுடன், மார்பிளிக்ஸ் எனும் சித்தார்த் ஆனந்தின் தயாரிப்பு நிறுவனத்தையும் அறிமுகம் செய்தார். தற்போது இப்படத்தின் பட்ஜெட் 250 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டைலிஸ் ஆக்சன் திரைப்படமாக இதை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பேங் பேங், வார் என இரு ஹிட் படங்களைக் கொடுத்த ரித்திக் - சித்தார்த் மீண்டும் இணைவது ரித்திக் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இயக்குநராக இருந்த சித்தார்த், மார்பிளிக்ஸ் மூலமாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். முதல் படமே ரித்திக் உடன் இணைவதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">