ETV Bharat / entertainment

’புஷ்பா 2’ இசையமைப்பாளர் சர்ச்சை: படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து சாம் சி.எஸ் பதிவு! - SAM CS THANKED PUSHPA 2 TEAM

Sam CS thanked pushpa 2 team: ’புஷ்பா 2’ திரைப்படத்திற்கு பின்னணி இசையமைக்க வாய்ப்பு அளித்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புஷ்பா 2 படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ள சாம் சி.எஸ்
புஷ்பா 2 படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ள சாம் சி.எஸ் (Credits - Mythri Movie Makers X Page, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 3, 2024, 12:37 PM IST

சென்னை: 'புஷ்பா 2' திரைப்படத்திற்கு பின்னணி இசையமைக்க வாய்ப்பு அளித்ததற்கு சாம் சி.எஸ் நன்றி தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘புஷ்பா 2’. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. புஷ்பா முதல் பாகம் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்காக அல்லு அர்ஜூன் தேசிய விருது வென்றார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் தேசிய விருது பெற்றார். இதனைத்தொடர்ந்து ’புஷ்பா 2’ பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

புஷ்பா 2 திரைப்பட பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் புஷ்பா 2 படக்குழுவிற்கும், தேவி ஸ்ரீ பிரசாத் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே தேவி ஸ்ரீ பிரசாத் புஷ்பா 2 திரைப்பட சென்னை புரமோஷனில், நான் பாடல்கள், பின்னணி இசையமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக தயாரிப்பாளர் புகார் கூறுவதாகவும், என் மீது அன்பை விட புகார்கள் தான் அதிகமாக உள்ளதாக மேடையில் வெளிப்படையாக தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து புஷ்பா 2 பின்னணி இசையை தமன் அல்லது சாம் சி.எஸ் இசையமைத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதிபடுத்தும் விதமாக இன்று சாம் சி.எஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “’புஷ்பா 2’ திரைப்படத்தில் பின்னணி இசையமைக்க வாய்ப்பு அளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. தயாரிப்பாளர் ரவி ஷங்கர், நவீன் யேர்னேனி ஆகியோர் ஆதரவால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: கோலாகலமாக நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா; தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் படங்கள் என்ன?

மேலும் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நன்றி. அவருக்கு பின்னணி இசையமைப்பது உண்மையிலேயே ஃபயராக இருந்தது. இப்படத்தில் சுகுமார் இயக்கியுள்ள சண்டைக் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு பின்னணி இசையமைத்தது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. புஷ்பா 2 படத்தொகுப்பாளர் நவீன் நூலி தொடர்ச்சியாக அளித்த ஆதரவிற்கு நன்றி” என கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.