சினிமா ரசிகர்கள் கண்டுகளிக்க வேண்டிய ரசனையான படங்களையும் நிகழ்ச்சிகளையும், தன்னுடைய ’அர்ஜூன் ரெகமண்ட்ஸ்’ டிஜிட்டல் ப்ராபர்டி மூலம் பரிந்துரைத்து வருகிறார் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர்.
அந்த வகையில் கரோனா ஊரடங்கால் தற்போது ஏராளமான பழைய நிகழ்ச்சிகள் மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், குழந்தைப் பருவத்தில் தன்னுடைய மனம் கவர்ந்த தொலைக்காட்சித் தொடராக விளங்கிய ’ப்யோம்கேஷ் பக்ஷி’ எனும் நிகழ்ச்சியை பரிந்துரைத்திருக்கிறார்.
எழுத்தாளர் ஷரண்டிண்டு பந்த்யோபாத்யே வால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரமான ’ப்யோம்கேஷ் பக்ஷி’, ரஜித் கபூர் நடிப்பில் தூர்தர்ஷனில் 90 களின் ஆரம்பத்தில் ஒளிபரப்பட்டது.
தற்போது 34 வயதை எட்டியுள்ள அர்ஜூன் கபூர், இந்நிகழ்ச்சியைத் தான் மீண்டும் பார்க்கத் தொடங்கியுள்ளதாகவும், மீண்டும் தன்னுடைய குழந்தைப்பருவத்திற்கே இந்நிகழ்ச்சி தன்னை இட்டுச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ”நான் பார்த்த கதாபாத்திரங்களிலேயே ப்யோம்கேஷ் ஒரு சிறந்த கதாநாயகன். அதி புத்திசாலி. அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடியவர். ஒவ்வொரு குற்றத்திலும் அவர் துப்பு துலக்குவது என்னை நிகழ்ச்சியுடன் இறுக்கமாகக் கட்டிப்போட்டது.
சிறப்பாக எழுதப்பட்ட ஒரு மிகச் சிறந்த தொடர் இது. கால வரையற்றது. அனைவருக்குமானது” என மனம் நெகிழ்ந்து அர்ஜூன் கபூர் தெரிவித்துள்ளார். மேலும். தானும் இதேபோல் ஒரு அண்டர் கவர் நாயனாகவும், நாட்டைக் காப்பாற்றும் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நாயகனாக ஒருநாள் திரையில் ஜொலிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : உணவின்றி தவித்த மக்களுக்கு உதவிய சல்மான் கான்