ETV Bharat / sitara

வில்லனாக பாலிவுட் செல்லும் 'பிக் பாஸ்' புகழ் கணேஷ் வெங்கட்ராம் - பாலிவுட்டில் அறிமுகமாகும் கணேஷ் வெங்கட்ராம்

'கன்ஸ் ஆஃப் பனாரஸ்' என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் கணேஷ் வெங்கட்ராமன், நடிகர்களிடம் இருந்து கிடைக்கும் வாழ்த்துகளால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்.

Guns Of Banaras movie
Ganesh Venkatram makes Bollywood Debut
author img

By

Published : Mar 2, 2020, 11:31 PM IST

மும்பை: தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வந்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், தற்போது பாலிவுட் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார். 'கன்ஸ் ஆஃப் பனாரஸ்' படத்தை சேகர் ஷூரி இயக்குகிறார். படத்தில் கரண் நாத், நத்யாலா கெளர், அபிமன்யூ சிங், ஸரினா வாஹப், ஷில்பா ஷரோட்கர் என பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

எனது திறமை, முயற்சிகளுக்கு ஊக்கமளித்து பாராட்டிய தென்னிந்திய சினிமா இயக்குநர்களுக்கு நான் என்றும் கடன்பட்டுள்ளேன். அவர்கள் எனக்கு வாய்ப்பளித்த சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்கவில்லையென்றால் எனக்கு பாலிவுட் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

நான் பாலிவுட் செல்லவிருப்பதற்கு பலரும் பாராட்டி வருகிறார்கள். பழம்பெரும் நடிகை ரேகாவிடம் கிடைத்த பாராட்டை என மனதுக்கு நெருக்கமானதாக கருதுகிறேன். எனது கதாபாத்திரத்தை தேவையானவற்றை சிறப்பாக தருவேன் என நம்புகிறேன். கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கன்ஸ் ஆஃப் பனாரஸ் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் 'அபியும் நானும்' படத்தில் அறிமுகமான கணேஷ் வெங்கட்ராம், உன்னைப்போல் ஒருவன், இவன் வேறமாதிரி, தொடரி, நாயகி என பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 'பிக் பாஸ்' சீசன் நிகழ்ச்சியில் கடைசி நாள் வரை இருந்த இவர், நான்காவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'திரெளபதி படம் எதுக்கு எடுத்தேன்னு தெரியுமா?' - இயக்குநர் மோகன் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.