ETV Bharat / sitara

அனைவருக்கும் கல்வி: விழிப்புணர்வை ஏற்படுத்தும் தியா மிர்சா - Education for all - Dia mirza posted about her school memory

நடிகை தியா மிர்சா தனது பள்ளி கால புகைப்படத்தை பகிர்ந்து கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

Education for all - Dia mirza posted about her school memory

author img

By

Published : Aug 2, 2021, 6:34 PM IST

விளிம்பு நிலை மக்களின் குழந்தைகளுக்கு உதவி வரும் அமைப்பு ‘Save the Children'. இந்த அமைப்பின் கலைஞர்களுக்கான தூதுவராக இருக்கிறார் நடிகை தியா மிர்சா. இவர் பல்வேறு சமூகநலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இயற்கையை பாதுகாப்பது குறித்து தொடர்ந்து பேசிவரும் வெகு சிலரில் இவரும் ஒருவர். இவர் தற்போது குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்பு ஏற்படுத்த ஒரு சேலஞ்ச்-ஐ முன் வைத்துள்ளார்.

தியா மிர்சா தனது பள்ளி கால புகைப்படத்தை பகிர்ந்து, பள்ளி கால நெருக்கமான நினைவுகள். இயற்கை, படைப்பாற்றல் மீது என்னை காதல் கொள்ளச் செய்தது என் பள்ளிதான். அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்ல தகுதியானவர்களே; ஆனால், இந்த கரோனா சூழலில் 1 கோடி பெண் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாத சூழலில் இருக்கிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த என்னோடு இணையுங்கள் என நடிகை டாப்ஸி, லாரா தத்தா, பூமி பட்னேகர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.

MySChoolMemoryChallenge என்ற ஹேஷ்டேக்கில் சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இந்த விழிப்புணர்வு பரப்புரையில் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: ஷாருக்கானை கலாய்த்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோச்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.