ETV Bharat / sitara

நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளரை கைது செய்ய இடைக்காலத் தடை! - நடிகை தீபிகா படுகோனே மேலாளரை கைது செய்ய இடைக்கால தடை

மும்பை: தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷை வரும் 7ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Drug case: Deepika's manager Karishma Prakash gets relief from arrest till Nov 7

author img

By

Published : Nov 3, 2020, 9:11 PM IST

மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஜூன் மாதம் 14ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் தொடர்பான வழக்கில் போதைப்பொருள் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக என்.சி.பி. மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில, நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக், அப்துல் பாசித் பரிஹார், ஜைத் விலாட்ரா, திபேஷ் சாவந்த், சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலிவுட் பிரபலங்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதன் அடிப்படையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷின் வீட்டை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக அலுவலர்கள் கடந்த மாதம் திடீர் சோதனையிட்டனர்.

அப்போது அவரது வீட்டில் இருந்து ஏறத்தாழ 1.8 கிராம் எடையுள்ள ஹஷிஷ் (போதைப்பொருள் வகைகளுள் ஒன்று) கண்டெடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது 2017ஆம் ஆண்டு, தீபிகாவும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பற்றி வாட்ஸ்அப்பில் உரையாடியதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதையடுத்து கரிஷ்மாவுக்கும், தீபிகாவிற்கும் சம்மன் அனுப்பி கடந்த மாதம் விசாரணை மேற்கொண்டனர். அக்டோபர் 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு கரிஷ்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அன்று கரிஷ்மா வரவில்லை. விசாரணைக்கு வராதது குறித்து அலுவலர்களுக்கு இதுவரை விளக்கமோ தகவலோ கரிஷ்மா அளிக்கவில்லை.

இந்நிலையில், தனக்கு முன் பிணை வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன்பு கரிஷ்மா பிரகாஷ், கட்டாயம் ஆஜராக வேண்டும் எனவும், வரும் 7ஆம் தேதி வரை அவரை கைது செய்யக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க...தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டிலிருந்து போதைப்பொருள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.