பாலிவுட் நடிகை திஷா பதானி தான் நடித்த 'மலங்' படத்தின் மூலம், தனக்குப் பிடித்த நடிகரான அனில் கபூருடன் நடித்தது பிரமிப்பாக இருந்ததாகத் தெரிவித்தார்.
மோஹித் சுரி இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், திஷா பதானி, அனில் கபூர் ஆகியோர் நடித்து வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் திரைப்படம் 'மலங்'.
இத்திரைப்படத்தில் தனக்கு மிகவும் பிடித்த நடிகரான அனில் கபூருடன், தான் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்தார் நடிகை திஷா பதானி. 'தான் மிகவும் விரும்பிய நடிகரான அனில் கபூருடன் தான் திரையில் வருவோம் என துளியும் எதிர்பார்க்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
'மிஸ்டர் இந்தியா' திரைப்படத்தில் அனிலைப் பார்த்து பார்த்து, சிறு வயதில் ரசித்துவிட்டு தற்போது அவருக்கு அருகிலேயே அமர்ந்து நடித்தது பூரிப்பாக இருந்ததாகத் திஷா மகிழ்ச்சி படக்கூறினார். மேலும் 'மிஸ்டர் இந்தியா' திரைப்படத்தில் பார்த்ததைப் போலவே தற்போதும் அனில் உள்ளதாகத் திஷா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காதல் ததும்பும் ’மலங்’ திரைப்பட பாடலை வெளியிட்ட திஷா பதானி!