ETV Bharat / sitara

கரோனா பிடியில் சிக்கிய தீபிகா படுகோனேவின் குடும்பம்!

பெங்களூரு: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் பெற்றோர், சகோதரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Deepika
Deepika
author img

By

Published : May 4, 2021, 6:17 PM IST

பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரான பிரகாஷ் படுகோனேவின் மகள் என்பது தெரிந்ததே. பிரகாஷ் படுகோனே (65) தற்போது பெங்களூரில் தனது மனைவி உஜ்ஜாலா, இளைய மகள் அனிஷா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், காய்ச்சலுடன் இருந்த பிரகாஷ் படுகோனேவிற்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே போல் உஜ்ஜாலா, அனிஷா ஆகியோருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு லேசான தொற்று பாதிக்கப்பட்ட தெரியவந்தது. இதனால் அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் பிரகாஷ் படுகோனே தற்போது குணம் பெற்று வருவதால் விரைவில் வீடு திரும்பவார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வீட்டில் சிகிச்சை பெற்றுவரும் தீபிகாவின் அம்மா, சகோதரி ஆகியோரும் குணமடைந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.