தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 1, சீசன் 2 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக 'குக் வித் கோமாளி சீசன் 2' யாரும் எதிர்பாரத விதத்தில் பெரும் ஹிட் அடித்தது. இதில் கலந்துக்கொண்ட, புகழ், சிவாங்கி, உள்ளிட்டோர் தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றிப்பெற்றையடுத்து மற்ற மொழி சேனல்களும் இந்த நிகழ்ச்சியை தங்களது மொழிக்கு ஏற்ப எடுக்கும் முயற்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொடங்கியுள்ளது.
தற்போது சீசன் 3 இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.