சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கசட தபற'. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சிஎஸ், பிரேம்ஜி மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.டி.விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், ஆர்.டி ராஜசேகர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். காசி விஸ்வநாதன், ராஜா முஹமது, ஆண்டனி, பிரவீன் KL, விவேக் ஹர்ஷன் மற்றும் ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்.
ஒரு படத்தில் 6 படத்தொகுப்பாளர்கள், 6 இசையமைப்பாளர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். நாயகிகளாக ரெஜினா, ப்ரியா பவானி சங்கர், விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
-
We are happy to announce our #kasadatabara will be streaming very soon on @sonyliv @chimbu_devan @vp_offl @tridentartsoffl @sonylivintl @001danish @golu_a @madhurasreedhar @dhananjayang #TalesOfSouthMadras ps. the artwork in this poster was done by our director in just 20mins👏🏼 pic.twitter.com/VcmfwDG1R4
— venkat prabhu (@vp_offl) August 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are happy to announce our #kasadatabara will be streaming very soon on @sonyliv @chimbu_devan @vp_offl @tridentartsoffl @sonylivintl @001danish @golu_a @madhurasreedhar @dhananjayang #TalesOfSouthMadras ps. the artwork in this poster was done by our director in just 20mins👏🏼 pic.twitter.com/VcmfwDG1R4
— venkat prabhu (@vp_offl) August 8, 2021We are happy to announce our #kasadatabara will be streaming very soon on @sonyliv @chimbu_devan @vp_offl @tridentartsoffl @sonylivintl @001danish @golu_a @madhurasreedhar @dhananjayang #TalesOfSouthMadras ps. the artwork in this poster was done by our director in just 20mins👏🏼 pic.twitter.com/VcmfwDG1R4
— venkat prabhu (@vp_offl) August 8, 2021
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. கரோனா பரவல் காரணமாக இப்படம் நேரடியாக சோனி லிவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'கசட தபற படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்' - விவரிக்கும் சிம்புதேவன்