நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டனர். மேலும், பாலிவுட்டில் பலர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போதைப்பொருள் தடுப்பு முகமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
அதில், ரியா சக்ரபோர்த்தி, ஷோவிக் சக்ரவர்த்தி இருவரும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு போதை மருந்து விநியோகிக்கும் கூட்டமைப்பு ஒன்றில் நீண்ட கால உறுப்பினர்களாக இருந்து வருவதாகவும், பல விநியோகிஸ்தர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் இதுகுறித்து, போதை மருந்து தடுப்பு முகமை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தது.
இதனையடுத்து மீண்டும் ரியா சக்ரபோர்த்தி, ஷோவிக் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் பிணை வேண்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த மனுவை இன்று (அக்.07) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், நடிகை ரியாவுக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டது. மேலும், ரியா விடுதலையான 10 நாள்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். மும்பையை விட்டு வெளியே செல்வதாக இருந்தால், விசாரணை அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பாஸ்போர்டை ஒப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஷோவிக் சக்ரவர்த்திக்கு பிணை வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதையும் படிங்க...ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!