ETV Bharat / sitara

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம் - இர்ஃபான் கான் மரணம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Irrfan Khan
Irrfan Khan
author img

By

Published : Apr 29, 2020, 12:47 PM IST

Updated : Apr 29, 2020, 3:14 PM IST

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் 2018ஆம் ஆண்டு முதல் புற்று நோயுடன் போராடிவந்தார். அதற்கான சிகிச்சையையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இருப்பினும் செவ்வாய் கிழமை (ஏப்.28) அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இர்ஃபான் கான் இன்று (ஏப்.29) உயிரழந்தார்.

இதுகுறித்து இர்ஃபான் கானின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "2018 ஆம் ஆண்டு நியூரோ எண்டோகிரைன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்த இர்ஃபான் இதை எதிர்த்து போராடி வெல்வேன் என்று தனது மனதில் நம்பிக்கையுடன் எழுதிவைத்தார். திரையில் தனது கண்களால் முக்கிய காட்சிகளின் உணர்வுகளை கடத்தும் நபராக இர்ஃபான் இருந்துள்ளார். இந்த நாளில் அவர் உயிரிழந்த செய்தி நம்மை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.

இர்ஃபான் வலிமையான மன தைரியம் உடையவர். அவர் நாம் அனைவருக்கும் முன் மாதிரி. நாம் அனைவரும் அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் அவரது தாய் ஜெய்ப்பூரில் வசித்து வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவருடைய 85 வயதில் உயிரிழந்தார். ஊரடங்கு காரணமாக பயணம் செய்ய முடியாததால், வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக தன் அன்னைக்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இர்ஃபான்கான் நடிப்பில் சமீபத்தில் இயக்குநர் ஹோமி அடஜானியா இயக்கத்தில் 'அங்ரேஸி மீடியம்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடித்திருந்தார்.

Last Updated : Apr 29, 2020, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.