ETV Bharat / sitara

மெகா ஸ்டாரின் பேரனை அறிமுகப்படுத்தும் கரண் ஜோஹர்?

மும்பை: இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸின் கீழ்  அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரண் ஜோஹர்
கரண் ஜோஹர்
author img

By

Published : Jul 14, 2020, 10:32 PM IST

Updated : Jul 15, 2020, 9:59 AM IST

பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கும், ஜெயா பச்சனுக்கும் 1973ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு அபிஷேக் பச்சன், ஸ்வேதா பச்சன் என இரு பிள்ளைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அபிஷேக் பச்சன் தனது தந்தையைப் போலவே பாலிவுட்டில் முன்னணி பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவரை அடுத்து ஸ்வேதா பச்சன் மகன் அகஸ்தியா நந்தாவும் பாலிவுட்டில் அடி எடுத்து வைக்க உள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன் தயாரிக்கும் புதிய படமொன்றில் அகஸ்தியா நந்தா நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஆலியா பட், வருண் தவான், ஜான்வி கபூர், அனன்யா பாண்டே போன்ற நடிகர்களை அறிமுகப்படுத்திய கரண், தற்போது அகஸ்தியா நந்தாவையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் 19 வயதான அகஸ்தியா நந்தா, தனது தாத்தா அமிதாப்பை போல ஒரு நடிகராக மாற விரும்பியுள்ளார். அதற்காக நடிப்பு பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு வாரிசு அரசியல் விவாதத்தில் சிக்கிய கரண் ஜோஹரை நெட்டிசன்களும் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் திட்டித் தீர்த்ததை அடுத்து, அவர் தற்போது சமூக வலைதள பக்கத்திலிருந்து விலகியே இருக்கிறார்.

Last Updated : Jul 15, 2020, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.