ETV Bharat / sitara

'பிரம்மாஸ்திரா' படத்திலிருந்து விடைபெற்ற 'பிக் பி' - பிரம்மாஸ்திரா பட அப்டேட்

'பிரம்மாஸ்திரா' படத்தின் படப்பிடிப்பில் பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் நிறைவடைந்துள்ளது.

Amitabh Bachchan
Amitabh Bachchan
author img

By

Published : Mar 2, 2020, 10:30 AM IST

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலீயா பட், மௌனி ராய், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'பிரம்மாஸ்திரா'. பிரமாண்ட பொருள்செலவில் உருவாகிவரும் இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்குகிறார்.

ஹிரோ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், அபூர்வா மேத்தா, நமித் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.

'பிரம்மாஸ்திரா' படம் மூன்று பாகங்களாக உருவாகும் நிலையில், இதன் முதல் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்றுவருகிறது.

  • T 3455 - .. he teaches and sets up for me the sound ear plugs .. they sound good .. good riddance of the wires and cables .. !! 👍 pic.twitter.com/bxwCTbg09p

    — Amitabh Bachchan (@SrBachchan) February 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது சமூக வலைதளப்பக்கத்தில், இப்படத்தில் எனது கதாபாத்திரம் நிறைவடைந்துவிட்டது. விடைபெறுகிறேன். என்று பதிவிட்டிருந்தார். அதற்கு முன் ரன்வீர், அமிதாப் பச்சனுக்கு புதிய ஆப்பிள் ஹெட்போன் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

'அந்நியன்', 'ராவணன்' படங்களின் ஒளிப்பதிவாளர் வேலாயுதம் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். 'பிரம்மாஸ்திரா' படம் மூன்று பாகங்களாக உருவாகும் நிலையில், இதன் முதல் பாகத்தை இந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி வெளியிடவுள்ளதாகப் படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, நியூயார்க், மும்பை, மாணலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.