பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அமிதாப் பச்சனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கும், ஜெயா பச்சனுக்கும் 1973ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று அமிதாப் தனது 47ஆவது திருமண நாளைக் கொண்டாடுகிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “ஜூன் 3, 1973. சன்ஜீர் படம் வெற்றிபெற்ற போது, அந்த வெற்றியைக் கொண்டாட சில நண்பர்களுடன் நான் முதல் முறையாக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தேன்.
அங்கு செல்வதற்கு முன்பு திருமணம் குறித்து என் அப்பா, நீ யாருடன் போகப் போகிறாய்? என்று கேட்டார். அதற்கு நான் யாருடன் போகப்போகிறேன் என்று கூறினேன். அவர் சொன்னார், போவதற்கு முன்பாக நீ அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் நீ அங்கு செல்லக்கூடாது என்றார். நான் என் தந்தையின் பேச்சை கேட்டேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அமிதாப் பச்சன் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இயக்குநர் கார்த்திக் நரேன் பெயரில் நடந்த மோசடி!