ETV Bharat / sitara

சுஷாந்த் தற்கொலை: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை - சுஷாந்த் மரணம் குறித்து சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்காக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பாந்திரா காவல் நிலையத்திற்குச் சென்றார்.

Bhansali on interrogation in Sushant Singh Rajput suicide

author img

By

Published : Jul 6, 2020, 4:38 PM IST

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் பாலிவுட் திரைத்துறையையே உலுக்கியது. இதுகுறித்து திரைத்துறையினர் பலரின் மீது புகார் எழுப்பப்பட்டது. சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக திரைத்துறையினர் பலரைக் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டின் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி விசாரணைக்காக பாந்திரா காவல் நிலையத்துக்குச் சென்றார்.

முன்னதாக, சுஷாந்தும் சஞ்சய் லீலா பன்சாலியும் ஒரு திரைப்படத்துக்காக இணைந்து பணியாற்றப்போவதாக இருந்தது. ஆனால் சுஷாந்த் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்ததால் பன்சாலியின் இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனது. சுஷாந்த் இறந்த பிறகு அவர் இறப்புக்கு பாலிவுட்டில் இருக்கும் நெப்போட்டிஸம்தான் காரணம் என்று ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டுவந்தது.

மேலும் சுஷாந்தை பல திரைப்படங்களில் நடிக்கவிடாமல் செய்ததாகவும் பல நடிகர்கள் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக, இயக்குநர் கரன் ஜோகர் மீதே பலரும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதையும் படிங்க... 'நெப்போட்டிஸத்துக்கு பலியானேன்'- வாயால் சிக்கிய சைஃப் அலிகான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.