நாட்டின் மிகப்பெரிய திரைப்பட நகரம் கௌதம் புத்தா நகரில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் என போஜ்புரி நடிகரும் பாஜக எம்பியுமான ரவி கிஷன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரவி கிஷன் கோரக்பூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது, "முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரப் பிரதேச அரசு இந்தத் திட்டத்தை விரைவாக முடிக்க முடிவு செய்துள்ளது.
போஜ்புரி பிலிம் சிட்டியை பூர்வஞ்சலில் உருவாக்குவது குறித்து நான் பலமுறை யோகி ஆதித்யநாத் உடன் பேசியிருக்கிறேன். படப்பிடிப்பிற்காக கோரக்பூரை ஒரு முக்கிய மையமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
கரோனா தொற்று காரணமாக உலகெங்கிலும் வேலைவாய்ப்பின்மை சூழல் உருவாகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், போஜ்புரி பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இங்கிருக்கும் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதமாக அவர்கள் படத்தை இங்கேயே உருவாக்குவார்கள் என நான் நம்புகிறேன்
இதுவரை, சுமார் ஐந்து போஜ்புரி படங்கள் இணையத் தொடர்கள் கோரக்பூரில் படமாக்கப்பட்டுள்ளன.
மும்பையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கோரக்பூரில் பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோரக்பூருக்கு சரியான போக்குவரத்து வழிகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட நல்ல கலைஞர்கள், திறமையான தொழில் வல்லுநர்கள் குறைந்த பட்ஜெட்டில் பணியாற்றத் தயாராக உள்ளனர்.
இங்கிருந்து மும்பைக்குச் செல்லும் கலைஞர்கள் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொள்ள பல அவமானங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில சமயத்தில் விரக்தியையும் சந்திக்க வேண்டியிருக்கும். திரையுலகில் வேலை பெற எனது பெயரிலிருந்து சுக்லா என்ற குடும்பப்பெயரை நீக்கினேன்.
புதிய திரைப்பட நகரம் இந்த பிராந்தியத்தின் கலைஞர்களுக்கு பயனளிக்கும். மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்ந்து இணைந்திருக்கும்போது முழு மரியாதையுடன் முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.
பூர்வஞ்சலின் சிறந்த வளர்ச்சிக்கு மக்களவை உறுப்பினராக இருப்பதோடு ஒரு கலைஞனாக சினிமா வளர்ச்சிக்கும் என்னால் முடிந்த பங்கை நிச்சயம் வழங்குவேன்" என்றார்.
திரையுலகில் பல அவமானங்களை சந்திக்க நேரிடும் - ரவி கிஷன் - போஜ்புரி நடிகர் ரவி கிஷன்
கோரக்பூர்: மும்பைக்குச் செல்லும் கலைஞர்கள் திரையுலகில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொள்ள பல அவமானங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நடிகர் ரவி கிஷன் கூறியுள்ளார்.