ETV Bharat / sitara

'ஓடிடி தளங்கள் திரையரங்கத்தை அழிக்காது' - அனுஷ்கா ஷர்மா - anushka sharma on ott theater debate

நடிகை அனுஷ்கா ஷர்மா ஓடிடி தளங்களில் திரைப்படம் வெளியாவது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அனுஷ்கா ஷர்மா
அனுஷ்கா ஷர்மா
author img

By

Published : Jun 21, 2020, 4:13 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதற்குத் திரையரங்கு உரிமையாளர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்ந்தால் பலரும் திரையரங்கத்தை மறந்துவிடுவார்களோ என்று அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகையும், தயாரிப்பாளருமான அனுஷ்கா ஷர்மா பேட்டியளித்துள்ளார். அவர், "நாம் ஒரு அசாதாரண சூழ்நிலையில் இருக்கிறோம். ஆனால், அதை கணக்கில் எடுத்துக்கொண்டு நாம் எதிர்காலத்தைக் கணிக்க முடியாது.

கடந்த சில வருடங்களாக ஓடிடி தளம் அவர்களது கண்டெண்ட் மூலம் உயர்ந்துள்ளனர். ஆனால் பலரும் கரோனாதான் ஓடிடி உயர்வதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு. ஓடிடி தளத்தில் எவ்வித கதையை வேண்டுமானாலும் கூறலாம், திரையரங்கத்தில் அதைக் காண்பிக்க முடியாது. இதனால் திரையரங்கம் அழிந்துவிடும் என்று கூறமுடியாது.

ஏனென்றால் இந்தியர்களுக்குக் கொண்டாட்டம் என்பது மிகவும் பிடிக்கும். அதிலும் பெரிய ஹீரோவின் திரைப்படங்களைத் திரையரங்கத்தில் விசில் அடித்தும், கை தட்டியும் பார்க்க பிடிக்கும். ஓடிடி தளம் மூலம் புது புது நடிகர்கள், இயக்குநர்கள் அறிமுகமாவார்கள்" என்று கூறியுள்ளார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.