பாலிவுட்டில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம்வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்' என்னும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.புதிய கதைகளை தேர்ந்தெடுப்பதாலும், வித்தியாசமான திரைக்கதை அமைப்பினாலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்நிலையில், இவர் தற்போது புதிய புரொடக்ஷன் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். 'குட் பேட் பிலிம்ஸ்' என்று அதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. Netflix-இல் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் திரைப்படமான 'ChokedPaisaBoltaHai' இதன் முதல் தயாரிப்பு ஆகும். அனுராக் இதற்கு முன்பு Phantom Films என்னும் தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.