இந்தியாவில் உலகப்பெருந்தொற்றான கரோனா வைரஸூக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை ஆலியா பட், மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் சாக்லேட், ஸ்வீட் பன், பழங்கள், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை அனுப்பியுள்ளார். அதில் 'தற்போது பொதுமக்களை கரோனாவில் இருந்து பாதுகாக்க நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணி மிகப்பெரியது. நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Thank you @aliaa08 for such a sweet surprise..much appreciated in these bitter times of pandemic..!! pic.twitter.com/6eBP1Czf9r
— Dr. Shripad Gangapurkar (@Shripad97) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you @aliaa08 for such a sweet surprise..much appreciated in these bitter times of pandemic..!! pic.twitter.com/6eBP1Czf9r
— Dr. Shripad Gangapurkar (@Shripad97) May 17, 2020Thank you @aliaa08 for such a sweet surprise..much appreciated in these bitter times of pandemic..!! pic.twitter.com/6eBP1Czf9r
— Dr. Shripad Gangapurkar (@Shripad97) May 17, 2020
இதுகுறித்து அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஸ்வீட், ஸ்நாக்ஸ் அனுப்பிய ஆலியா பட்டுக்கு நன்றி. இது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அனைத்து மருத்துவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
ஆனால், இதுகுறித்து ஆலியா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. இது ஆலியா தான் செய்தாரா அல்லது அவரது சார்பாக வேறு யாரேனும் செய்தார்களா என்பது தெரியவில்லை.