ETV Bharat / sitara

ஹாலிவுட்டில் கால் பதிக்கிறாரா ஆலியா? - ஹாலிவுட்டில் ஆலியா

பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் வரிசையில் ஆலியா பட்டும் தற்போது ஹாலிவுட்டில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆலியா
ஆலியா
author img

By

Published : Jul 9, 2021, 3:41 PM IST

Updated : Jul 9, 2021, 4:16 PM IST

’வாரிசு நடிகை’ எனத் தொடர்ந்து பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்த ஆலியா பட், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை புறந்தள்ளி ஹை வே, உட்தா பஞ்சாப், ராசி, கல்லி பாய் உள்ளிட்ட படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார்.

தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆலியா பட், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடித்துள்ள ’கங்குபாய் கத்தியாவாடி’ படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. தற்போது தனது சொந்த தயாரிப்பில் உருவாகிவரும் ’டார்லிங்ஸ்’படப்பிடிப்பில் ஆலியா கலந்து கொண்டுவருகிறார்.

இந்நிலையில், வரும் ஆண்டுகளில் ஆலியா பட் ஹாலிவுட்டில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக ’வில்லியம் மோரிஸ் எண்டீவர்’ எனும் பிரபல உலக நிறுவனத்துடன் ஆலியா உடன்படிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல ஹாலிவுட் நடிகர்கள் பென் அஃப்ளெக், கிரிஸ்டியன் பேல், ஜெனிஃபர் கார்னர், ஜேல் கில்லென்ஹால் உள்ளிட்ட பலரும் இந்த நிறுவனத்துடன் தான் உடன்படிக்கையில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் வரிசையில் ஆலியாவும் ஹாலிவுட் சென்று கலக்குவார் என்ற நம்பிக்கையுடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இதையும் படிங்க: 50 லட்சம் லைக்குகளை கடந்த ’ரௌடி பேபி’ பாடல்!

Last Updated : Jul 9, 2021, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.