ETV Bharat / sitara

அனைத்து முடிவுகளும் உன்னோடுதான்: காதல் மனைவியை வாழ்த்திய அக்‌ஷய் - Twinkle Khanna's birthday

அக்‌ஷய் குமார் தனது காதல் மனைவி ட்விங்கிள் கன்னா பிறந்தநாளுக்கு உணர்வுப்பூர்வமாக ஓர் வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.

Akshay Kumar
Akshay Kumar
author img

By

Published : Dec 29, 2020, 4:47 PM IST

மும்பை: இன்று (டிசம்பர் 29) பிறந்தநாள் காணும் தனது காதல் மனைவி ட்விங்கிள் கன்னாவுக்கு அக்‌ஷய் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இருவரும் சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த அக்‌ஷய், கேள்விக்குறியான வாழ்க்கை முடிவுகளை எடுக்க மற்றுமொரு ஆண்டு இதோ... ஆனால், அனைத்து முடிவுகளை உன்னோடு சேர்ந்து எடுப்பேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இனிய பிறந்தநால் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

திரைப்பிரபலம் பூமி பெட்நேகர் உள்பட பலரும் இந்தப் பதிவை லைக் செய்துள்ளனர். அக்‌ஷய் குமார் ரசிகர்கள் ட்விங்கிள் கன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

1973 டிசம்பர் 23ஆம் தேதி பிறந்த ட்விங்கிள் கன்னா, பாலிவுட் பிரபலங்களான ராஜேஷ் கன்னா - டிம்பிள் கபாடியா தம்பதியின் மகள் ஆவார். 2001 ஜனவரி 17ஆம் தேதி அக்‌ஷய் குமாரை மணந்துகொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.