மும்பை: 'கமாண்டோ 3' படத்தின் ரிலீஸூக்காக காத்திருக்கும் நடிகை அடா சர்மா, ஃபேஸ்புக்கின் சர்வதேச டேட்டிங் ஷோவில் ஒப்பந்தமாகியுள்ளார்.
'தி பெஸ்ட் ஆஃப் மீ' என்ற பெயரில் தயாராகும் இந்த டேட்டிங் ஷோ மேட்ச்மேக்கராக தோன்றவுள்ளார் அடா சர்மா. அதாவது நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் ஆகியோர் தங்களுக்கான ஜோடியை தேர்வு செய்வதற்கு உதவிபுரியும் பணியில் ஈடுபடவுள்ளார்.
இதுகுறித்து அடா சர்மா கூறியதாவது,
மேட்ச்மேக்கிங் பணியை மிகப் பெரிய சக்தி எனக்கு கிடைத்திருப்பதாக உணர்கிறேன். பெரும் பொறுப்போடு இதை மேற்கொள்வேன். சரியான ஜோடிகளை தேர்ந்தெடுக்க சிறப்பான பங்களிப்பை அளிப்பேன் என நம்புகிறேன்.
காதல் உலகளாவிய மொழியாகத் திகழ்கிறது. எனவே அனைவரும் இந்த ஷோவை ரசித்து பார்க்க வேண்டும்.
எனது அறிமுக வெப்சீரிஸ் தொடரான 'தி ஹாலிடே' நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதேபோன்று அனைத்து வயதினரையும் ரசிக்கும் விதமான தொடர்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.
தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'சார்லி சாப்ளின் 2' படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் அடா சர்மா. பாலிவுட்டில் வித்யுத் ஜாம்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரைப்படமான 'கமாண்டோ 3' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அடா சர்மா, விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இதையடுத்து தற்போது ஃபேஸ்புக்கின் சர்வதேச டேட்டிங் ஷோவிலும் கலக்கவுள்ளார்.