பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷில்பாஷெட்டி. தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் அறிமுகமான ஷில்பாஷெட்டி, விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் ஆட்டம் போட்டிருந்தார். இதையடுத்து இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.
நான்கு வருடங்களாக இவர் படத்தில் நடிக்கைவில்லை என்றாலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி செய்திகளில் இவரது பெயர் இடம்பெறுவது தொடர்கிறது. இந்நிலையில் இவரது கணவர் ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான வதந்தி செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், பாலிவுட் பிரபலங்கள் பலரும் என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ள ஷில்பாஷெட்டிக்கு தொடர்ந்து போன் செய்து வருகின்றனராம்.
இதற்கெல்லாம் காரணம் யார் என்றால் பாலிவுட் இயக்குநர் அனுராக் பாசுதானாம்.
சூப்பர் டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியின் நடுவராக ஷில்பாஷெட்டியும், இயக்குநர் அனுராக் பாசுவும் பங்கேற்றுவருகின்றனர். இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது அனுராக் பாசு, ஷில்பாஷெட்டிக்கு தெரியாமல் அவரது போனை எடுத்து 'எனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் சண்டை போட்டுவிட்டேன் இதனால் அவரை விவாகரத்து செய்ய இருக்கிறேன்' என்று ஷில்பாஷெட்டி டைப் செய்ததுபோல் இந்த குறுஞ்செய்தியை ஷில்பாஷெட்டியின் தாயாருக்கு அனுப்பிவிட்டார்.
இதனைக்கண்டு பதறிப்போன அவரது தாயார் ஷில்பாஷெட்டிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தபோது அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த செய்தியை பரப்பியது அனுராக் பாசு என்பதும் தெரிந்தது.