ETV Bharat / sitara

பவர்ஃபுல் கதை... பவன் கல்யாண் மாஸ் ரீ என்ட்ரி! - ரீ என்ட்ரி புதிய படத்தில்

நடிகர் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

pawan kalyan
author img

By

Published : Sep 22, 2019, 10:53 AM IST

தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மீது ரசிகர்களுக்கு பயங்கரமான கிரேஸ் இருக்கிறது. இவர் மொத்தமாக நடித்தது 25 படங்கள்தான் என்றாலும் அதிக மக்களின் செல்வாக்கை பெற்றவர். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே 'ஜனசேனா' கட்சியைத் தொடங்கினார். ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்

அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால் நடிப்பிற்கு முழுக்கு போட்டார் பவன் கல்யாண். இவரது நடிப்பில் கடைசியாக 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அக்னயாதவாசி. மிகவும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு படுதோல்வியடைந்தது. இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும், தனது சினிமா கெரியரில் இதுதான் கடைசிப்படம் இனிமேல் தான் நடிக்கப்போவதில்லை என்று அவரே தெரிவித்திருந்தார். இதைக் கேட்டு அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர்.

அமிதாப்பச்சனுடன் பவன் கல்யாண்
அமிதாப்பச்சனுடன் பவன் கல்யாண்

பவன் கல்யாணை மீண்டும் திரையில் காணமாட்டோமா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் மீண்டும் நடிக்கவிருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இயக்குநர் கிரிஷ் இயக்கும் இப்படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் கிரிஷ் ஸ்பெஷலாக பவன் கல்யாணுக்காகவே ஒரு சக்திவாய்ந்த புரட்சிகரமான கதையை எழுதியுள்ளாராம். இதனால், தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் பவன் கல்யாணின் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்றுவருகிறாராம்.

பவன் கல்யாண் ஓகே சொன்னால் உடனே படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி கேட்ட பவன் கல்யாணின் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Intro:Body:

Actor Pawan Kalyan Re entry

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.