ETV Bharat / sitara

மூடு விழா திரையரங்கில் ஹவுஸ்ஃபுல்லுடன் ஒடிய '3 இடியட்ஸ்' - மூடு விழா கண்ட திரையரங்கில் திரையிடப்பட்ட 3 இடியட்ஸ்

ஜப்பானில் திரையரங்கம் ஒன்று மூடு விழா காணும் முன் ஆமீர் கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் திரையிடப்பட்டு ஹவுஸ் ஃபுல்லுடன் ஒடியுள்ளது.

Idiots
Idiots
author img

By

Published : Mar 4, 2020, 9:10 AM IST

'முன்னா பாய் எம்.பி.பி.எஸ்’, `சஞ்சு’ உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ஆமீர்கானை வைத்து 3 இடியட்ஸ் படத்தை 2009 ஆம் ஆண்டு இயக்கினார். இந்திய பொறியியல் கல்லூரியில் மூன்று மாணவர்களின் நட்பைச் சுற்றி வரும் இந்தப் படம், இந்தியக் கல்வி முறை மாணவர்கள் மீதான அழுத்தங்களை நகைச்சுவையுடன் உணர்வு பூர்வமாக கூறியது. இப்படம் இன்றுவரை அனைவரின் ஃபேவரிட் படமாக இருந்து வருகிறது.

பிரபல எழுத்தாளர் சேதன் பகத் எழுதிய ஃபைவ் பாயிண்ட் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கரீனா கபூர், மாதவன், போமன் இரானி, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தின் ரீமேக்கை இயக்குநர் ஷங்கர், விஜய்யை வைத்து 'நண்பன்' படத்தை இயக்கியிருந்தார்.

  • 【布施ラインシネマ のラストショーのラストショー】

    本日15:30の回
    「きっと、うまくいく」
    131名様のご来場!満席です!
    有難うございます! pic.twitter.com/5U3uerQwcv

    — 布施ラインシネマ (@fuselinecinema7) February 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், ஜப்பானில் உள்ள ஓசாகாவில் உள்ள திரையரங்கம் ஒன்று மூடு விழா கண்டுள்ளது. இந்த திரையங்கம் மூடும் முன் கடைசியாக 3 இடியட்ஸ் படத்தை திரையிட்டுள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு திரையிடப்பட்ட இப்படம் ஹவுஸ் ஃபுல்லுடன் ஒடியதாக அந்த திரையரங்க நிர்வாகம் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியுள்ளது. அதில் 'ஃபியூஸ் லைன் சினிமாவின் கடைசி சினிமா திரையிடப்பட்டுள்ளது. தற்போது மணி 15:30 (மதியம் 3.30). 131 பார்வையாளர்களுடன் ஹவுஸ் ஃபுல் மகிழ்ச்சி. நன்றி' என தெரிவித்துள்ளனர்.

தற்போது, இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கிவரும் 'லால் சிங் சத்தா' படத்தில் ஆமீர் கான், கரீனா கபூர் ஆகியோர் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இதையும் வாசிங்க: 'லால் சிங் சத்தா' பட அப்டேட்: மிலிட்டரி உடையில் ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆமீர் கான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.