ETV Bharat / sitara

#Metoo விவகாரத்தில் சிக்கிய இயக்குநருடன் பணிபுரிய முடிவு - அமீர் கான் மீது பாலிவுட் நடிகை காட்டம்! - geetika tyagi

#Metoo (மீடூ) விவகாரத்தில் சிக்கிய இயக்குநர் சுபாஷ் கபூருடன் பணிபுரிய முடிவு செய்துள்ளார் அமீர் கான்.

Mogul
author img

By

Published : Sep 11, 2019, 1:27 PM IST

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக தொடங்கப்பட்டது #Metoo இயக்கம். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மீடூ என்ற ஹேஷ்டேக்கில் பதிவு செய்தனர். இதில் ஹாலிவுட் முதல் இந்திய சினிமா வரை திரைத் துறை பிரபலங்கள் பலரும் சிக்கினர். அந்தவகையில் ஜாலி எல்.எல்.பி., குட்டு ரங்கீலா உள்ளிட்ட படங்களை இயக்கிய சுபாஷ் கபூர் மீது நடிகை கீதிகா தியாகி மீடூ குற்றஞ்சாட்டினார்.

Mogul
கீதிகா தியாகி

இந்தச் சூழலில்தான் அமீர் கான், சுபாஷ் கபூர் இணைந்து பணிபுரியவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. பாலிவுட் பிரபலங்கள் பலரும் மீடூ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அமீர் கானும் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மீடூவில் சிக்கிய ஒரு இயக்குநருடன் தான் பணிபுரிய மாட்டேன் என அந்த ப்ராஜெக்டிலிருந்து விலகினார். இந்நிலையில், அமீர் கான் மீண்டும் அந்த ப்ராஜெக்டில் பணிபுரியவுள்ளார்.

Mogul
குல்ஷன் குமார் - அமீர் கான்

டி - சீரிஸ் நிறுவனர் குல்ஷன் குமாரின் வாழ்க்கை வரலாற்று கதையை சுபாஷ் கபூர் படமாக்கவுள்ளார். ‘மொகுல்’ என பெயரிடப்பட்ட இந்த படத்தில் அமீர் கான் நடிப்பதுடன் இணை தயாரிப்பு பணியையும் மேற்கொள்கிறார்.

இது குறித்து அமீர், "ஒரு மனிதனின் பணிபுரியும் உரிமையையும் வாழ்வாதாரத்தையும் முடக்குவதுபோல் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கத்திலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில், என் முடிவை மாற்றிக்கொள்ள சொல்லி கேட்டிருந்தார்கள். சுபாஷ் கபூர் மீது சுமத்தப்பட்ட குற்றம் பற்றிய விசாரணை ஏதுமில்லை. அதுமட்டுமல்லாமல், அவருடன் பணிபுரிந்த பத்துக்கு மேற்பட்ட பெண்கள் அவரைப் பற்றி நல்ல முறையில் கூறுகிறார்கள். எனவேதான் சுபாஷ் உடன் பணிபுரிய முடிவு செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Mogul
தனுஸ்ரீ தத்தா

அமீர் கானின் இந்த முடிவு பாலிவுட் நடிகைகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திரையுலகில் மீடூ இயக்கத்தின் முன்னோடியான தனுஸ்ரீ தத்தா, அமீர் கானை கடுமையாக விமர்சித்துள்ளார். அமீர் கான் முடிவை மாற்றிக் கொள்வாரா இல்லை சுபாஷுடன் பணிபுரிவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.