ETV Bharat / sitara

’மும்பை மழை போல் உணர்கிறேன்’ - 29 வருட திரைவாழ்வு குறித்து ’கிங் கான்’! - கிங் கான்

”29 ஆண்டுகளாக நீங்கள் என் மீது பொழியும் அன்பு பொழிந்து வருவதைப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் பாதி நாள்கள் இவ்வாறு கடந்துள்ளதை உணர்கிறேன். உங்களை எல்லாம் நான் மகிழ்வித்திருக்கிறேன் என நம்புகிறேன்” என ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

ஷாருக்
ஷாருக்
author img

By

Published : Jun 25, 2021, 8:32 PM IST

Updated : Jun 25, 2021, 8:45 PM IST

’கிங் கான்’ எனும் செல்லப் பெயருடனும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்ளுடனும் பாலிவுட்டில் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேல் வெற்றி நடை போட்டு வருபவர் பிரபல நடிகர் ஷாருக் கான்.

ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல்

ஷாருக் கானின் முதல் படமான ’தீவானா’ வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைடைந்துள்ள நிலையில், இதனைக் கொண்டாடும்விதமாக "#asksrk" எனும் ட்விட்டர் செஷனைத் தொடங்கி தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஷாருக்!

வாங்க உரையாடலாம்...

என்னை விரும்புகிறீர்களா? காலையில் சீக்கிரம் முழித்து விட்டீர்களா? வாருங்கள் 15 நிமிடங்கள் உரையாடலாம்” என தனது ரசிகர்களுக்கு ஷாருக் அழைப்பு விடுக்க, அதனைத் தொடர்ந்து உற்சாகமான அவரது ரசிகர்கள், கேள்விக் கணைகளை அவர்களை தொடுத்தனர்.

  • This could be the earliest #AskSrk I am doing. If like me you all are awake early let’s have a 15 minutes conversation. Love srk

    — Shah Rukh Khan (@iamsrk) June 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மும்பை மழை போல் உணருகிறேன்...

உங்களுடைய தற்போதைய மனநிலை என்ன? என அப்போது ஒருவர் கேள்வி எழுப்ப, ”அதற்கு மும்பை மழையைப் போல் உள்ளது” என ஷாருக் பதிலளித்தார்.

அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானி உடனான உங்கள் அடுத்த படம் எந்த நிலையில் உள்ளது? என ரசிகர் ஒருவர் கேட்க, ”இனிதான் போன் செய்து கேட்க வேண்டும் அவர் லேட்டாக தூங்கும் பழக்கமுடையவர்” என குறும்பாக பதிலளித்தார்.

தொடர்ந்து ரசிகர் ஒருவர், மனமுடைந்து நொறுங்கிப் போவது குறித்து அவரிடம் அறிவுரை கேட்ட நிலையில் அதற்கு பதிலளித்த ஷாருக், ”நீங்கள் அவற்றை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. நினைவுகளாக அவற்றை மாற்றி சோகத்திலிருந்து பாடம் கற்று உங்களை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்” என ஆறுதல் தெரிவித்தார்.

  • You can never overcome it….keep it as a memory and learn from the sadness will make u stronger https://t.co/lNuCcQlcek

இதையும் படிங்க: #25YearsOFDDLJ குடும்பங்கள் கொண்டாடும் காதல் கதைக்கு வயது 25!

55 வயதாகும் நடிகர் ஷாருக் தனது திரையுலகப் பயணத்தை ஃபவுஜி, சர்கஸ் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் தொடங்கி, பின்னர் தீவானா படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.

தொடர்ந்து, சமத்கர், ராஜூ பன் கயா ஜெண்டில் மேன், டர், பாசிகர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, தில் தோ பாகல் ஹே, குச் குச் ஹோதா ஹே, தேவ்தாஸ், ஸ்வதேஸ், கல் ஹோ நா ஹோ, சக் தே இந்தியா, மெய்ன் ஹூன் னா, மய் நேம் இஸ் கான், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் தனது 30 ஆண்டு பாலிவுட் வாழ்க்கையில் நடித்துள்ளார்.

உருக்கமான ட்வீட்

மேலும் இன்றைய ட்விட்டர் நிகழ்வில், 30 ஆண்டுகளாக நீங்கள் என் மீது அன்பு பொழிந்து வருவதைப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் பாதி நாள்கள் இவ்வாறு கடந்துள்ளதை உணர்கிறேன். உங்களை எல்லாம் நான் மகிழ்வித்திருக்கிறேன் என நம்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

  • Been working. Just saw the ’overwhelmed ness’ of the lov of nearly 30 yrs u r showering on me here. Realised it’s more than half my life in the service of hoping to entertain u all. Will take out time tomorrow & share some love back personally. Thx needed to feel loved….

    — Shah Rukh Khan (@iamsrk) June 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2018ஆம் ஆண்டு வெளியான ஜீரோ உள்பட சில தோல்விப் படங்களை ஷாருக் சந்தித்து வந்த நிலையில், அவரது அடுத்த வெற்றிப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர்.

அட்லியுடன் கைகோர்க்கும் ஷாருக்?

’பதான்’ எனப் பெயரிடப்பட்ட அடுத்த பட வேலைகளில் ஈடுபட்டுள்ள ஷாருக், தமிழ் இயக்குநர் அட்லி உடன் அடுத்ததாக கைக்கோர்க்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தேவைகளுக்கு அதிகமாக வாழ்ந்து வருகிறோம்' - ஷாரூக் கான்

Last Updated : Jun 25, 2021, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.