பழம்தலைமுறையினர் முதல் இன்றைய இளம்தலைமுறையினர் வரை அனைவரையும் தன் பிடியில் கவர்ந்திழுத்து வைத்திருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் யுக்தியில் ஒன்றாகும். அதற்கு தகுந்தார்போல் ஆப்பிள் நிறுவனமும், தங்கள் சாதனத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல், அதனை மெருகேற்றி, தற்கால தொழில்நுட்பத்தை புகுத்தி பயனர்களுக்கு அளித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அமெரிக்க கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் தனது புதிய தகவல் சாதனங்களான ஐபோன்11 (Iphone11), ஐபோன்11 ப்ரோ (Iphone11 Pro), ஐபோன்11 ப்ரோ மேக்ஸ் (Iphone11 Pro Max), ஆப்பிள் வாட்ச் 5 சிரீஸ் (Apple Watch Series 5), ஆப்பிள் ஐபேட் (Apple Ipad) ஆகியவற்றுடன் ஆப்பிள் டிவி+ (Apple TV+), ஆப்பிள் ஆர்கேடை (Apple Arcade) அறிமுகம் செய்தது.
அதுகுறித்த விரிவான தகவல்களை தற்போது காணலாம்:
ஐபோன்11
- நிறங்கள் (Colour): கறுப்பு, வெள்ளை, மஞ்சள், சிகப்பு, ஊதா
- சேமிப்பு (Storage): 64ஜிபி, 128ஜிபி, 256 ஜிபி
- திரை (Display): 6.1” அங்குல திரவ தொழில்நுட்ப ரெட்டினா தொடுதிரை (Liquid Retina HD display)
- காட்சி தரம் (Display Quality): 326 பிபிஐயில் 1792 x 828 பிக்சல் ரெசல்யூஷன்
- வன்பொருள் (Hardware): மூன்றாம் தலைமுறை நியூரல் இன்ஜின் ஏ13 பையோனிக் சிப்
- பின்பக்க படக்கருவி (Primary Camera): இரட்டை 12எம்பி அல்ட்ரா வைட் 120 டிகிரி (f/2.4 அப்ரச்சர்) / வைட் (f/1.8)
- முன்பக்க படக்கருவி (Secondary Camera): 12 எம்பி ட்ரு டெப்த் (f/2.2 அப்பெர்சர்) உடன் 120fps ஸ்லோ மோஷன் 'ஸ்லோஃபி'
- இட அமைப்பு (Location): ஜி.பி.எஸ்/ஜி.என்.என்.எஸ் (GPS/GNSS), டிஜிட்டல் காம்பஸ்(Digital Compass), வைஃபை, ஐ-பியாகான் மைக்ரோ லொகேஷன் (iBeacon micro-location)
- உணரிகள் (Sensors): ஃபேஸ் ஐடி, பேரோமீட்டர் எனப்படும் காற்றழுத்தமானி, 3 அக்சிஸ் கைரோ, அக்செலெரோமீட்டர், ப்ரொசிமிட்டி, ஆம்பியென்ட் லைட்
- இயங்குதளம் (Operating System): ஐ-ஒஎஸ் 13
- மின்கல திறன் (Battery): காணொலி (17 மணிநேரம் பார்க்கலாம்), ஒலி (65 மணிநேரம் கேட்கலாம்)
- சார்ஜ்: 18W மூலம் 50% சார்ஜ் வெறும் 30 நிமிடத்தில்
- விலை: ரூ.64,000 முதல்
- எடை: 194 கிராம்
ஐபோன்11 ப்ரோ
- நிறங்கள் (Colour): தங்கம், சாம்பல், வெள்ளி, அடர் பச்சை
- சேமிப்பு (Storage): 64ஜிபி, 256ஜிபி, 512 ஜிபி
- திரை (Display): 5.8” அங்குல சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர் ஒலெட் தொடுதிரை (Super Retina XDR OLED display)
- காட்சி தரம் (Display Quality): 458 பிபிஐயில் 2436 x 1125 பிக்சல் ரெசல்யூசன் (2436x1125-pixel resolution at 458 ppi)
- வன்பொருள் (Hardware): மூன்றாம் தலைமுறை நியூரல் இன்ஜின் ஏ13 பையோனிக் சிப்
- பின்பக்க படக்கருவி (Primary Camera): மூன்று 12எம்பி அல்ட்ரா வைட் 120 டிகிரி (f/2.4 அப்ரச்சர்) / வைட் (f/1.8) / டெலிஃபோடோ (f/2.0)
- முன்பக்க படக்கருவி (Secondary Camera): 12எம்பி ட்ரூ டெப்த் (f/2.2 அப்ரச்சர்) உடன் 120fps ஸ்லோ மோஷன் 'ஸ்லோஃபி'
- இட அமைப்பு (Location): ஜி.பி.எஸ்/ஜி.என்.என்.எஸ் (GPS/GNSS), டிஜிட்டல் காம்பஸ்(Digital Compass), வைஃபை, ஐ-பியாகான் மைக்ரோ லொகேஷன் (iBeacon micro-location)
- உணரிகள் (Sensors): ஃபேஸ் ஐடி, பேரோமீட்டர் எனப்படும் காற்றழுத்தமானி, 3 அக்சிஸ் கைரோ, அக்செலெரோமீட்டர், ப்ரொசிமிட்டி, ஆம்பியென்ட் லைட்
- இயங்குதளம் (Operating System): ஐ-ஒஎஸ் 13
- மின்கல திறன் (Battery): காணொலி (18 மணிநேரம் பார்க்கலாம்), ஒலி (65 மணிநேரம் கேட்கலாம்)
- சார்ஜ்: 18W மூலம் 50% சார்ஜ் வெறும் 30 நிமிடத்தில்
- விலை: ரூ.99,900 முதல்
- எடை: 188 கிராம்
ஐபோன்11 ப்ரோ மேக்ஸ்
- நிறங்கள் (Colour): தங்க நிறம், சாம்பல், வெள்ளி, அடர் பச்சை
- சேமிப்பு (Storage): 64ஜிபி, 256ஜிபி, 512 ஜிபி
- திரை (Display): 6.5” அங்குல சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர் ஒலெட் தொடுதிரை (Super Retina XDR OLED display)
- காட்சி தரம் (Display Quality): 458 பிபிஐயில் 2436x1125 பிக்சல் ரெசல்யூஷன் (2436x1125-pixel resolution at 458 ppi)
- வன்பொருள் (Hardware): மூன்றாம் தலைமுறை நியூரல் இன்ஜின் ஏ13 பையோனிக் சிப்
- பின்பக்க படக்கருவி (Primary Camera): மூன்று 12எம்பி அல்ட்ரா வைட் 120 டிகிரி (f/2.4 அப்ரச்சர்) / வைட் (f/1.8) / டெலிஃபோடோ (f/2.0)
- முன்பக்க படக்கருவி (Secondary Camera): 12எம்பி ட்ரூ டெப்த் (f/2.2 அப்பெர்சர்) உடன் 120fps ஸ்லோ மோஷன் 'ஸ்லோஃபி'
- இட அமைப்பு (Location): ஜி.பி.எஸ்/ஜி.என்.என்.எஸ் (GPS/GNSS), டிஜிட்டல் காம்பஸ் (Digital Compass), வைஃபை, ஐ-பியாகான் மைக்ரோ லொகேஷன் (iBeacon micro-location)
- உணரிகள் (Sensors): ஃபேஸ் ஐடி, பேரோமீட்டர் எனப்படும் காற்றழுத்தமானி, 3 அக்சிஸ் கைரோ, அக்செலெரோமீட்டர், ப்ரொசிமிட்டி, ஆம்பியென்ட் லைட்
- இயங்குதளம் (Operating System): ஐ-ஒஎஸ் 13
- மின்கல திறன் (Battery): காணொலி (18 மணிநேரம் பார்க்கலாம்), ஒலி (65 மணிநேரம் கேட்கலாம்)
- சார்ஜ்: 18W மூலம் 50% சார்ஜ் வெறும் 30 நிமிடத்தில்
- விலை: ரூ.1,10,000 முதல்
- எடை: 226 கிராம்
ஆப்பிள் வாட்ச் சீரீஸ்5
- அணையாத திரை வசதி புதிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது
- பத்துக்கும் மேற்பட்ட புது ஸ்டைல்கள்
- ஹார்ட் மானிட்டர் தொடங்கி அனைத்து ஹெல்த் மானிட்டர் அம்சங்கள்
- ரூ.25,000 முதல் விலை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐ-பேட்
- நிறங்கள் (Colour): வெள்ளி, அடர் பச்சை, தங்கம்
- சேமிப்பு (Storage): 32ஜிபி, 128ஜிபி
- திரை (Display): 10.2” அங்குல ரெட்டினா தொடுதிரை
- காட்சி தரம் (Display Quality): 264 பிபிஐயில் 2160 x 1620 பிக்சல் ரெசல்யூசன் (2160 x 1620-pixel resolution at 264 ppi)
- வன்பொருள் (Hardware): ஏ10 பையோனிக் சிப்
- பின்பக்க படக்கருவி (Primary Camera): 8 எம்பி (f/2.4 அப்ரச்சர்)
- முன்பக்க படக்கருவி (Secondary Camera): 1.2 எம்பி ட்ரூ டெப்த் (f/2.2 அப்ரச்சர்)
- இட அமைப்பு (Location): ஜி.பி.எஸ்/ஜி.என்.என்.எஸ் (GPS/GNSS), டிஜிட்டல் காம்பஸ்(Digital Compass), வைஃபை, ஐ-பியாகான் மைக்ரோ லொக்கேஷன் (iBeacon micro-location)
- உணரிகள் (Sensors): ஃபேஸ் ஐடி, பேரோமீட்டர், 3 அக்சிஸ் கைரோ, அக்செலெரோமீட்டர், ஆம்பியென்ட் லைட்
- இயங்குதளம் (Operating System): புதிய ஐபேட் ஓஎஸ்
- மின்கல திறன் (Battery): காணொலி (10 மணிநேரம் பார்க்கலாம்)
- விலை: ரூ.29,900 முதல்
- எடை: 483 கிராம் (வைஃபை) / 493 கிராம் (வைஃபை & செல்லுலார்)
ஆப்பிள் டிவி ப்ளஸ்
- மாதம் 100 தனித்துவமான ஆப்பிள் ஒரிஜினல் இணையத் தொடர்கள்
- வெறும் மாதம் ரூ.99 (7 பயனர்கள் பயன்படுத்தலாம்)
ஆப்பிள் ஆர்கேட்
- ஆப்பிள் பயனர்களுக்கு என தனித்துவமான 100 விளையாட்டுகள்
- வேறு எந்த இயங்குதளத்திலும் கிடைக்காத விளையாட்டு அனுபவம்
- மாதம் ரூ.99க்கு கட்டணத்தில் வெளியாகிறது.
ஆப்பிள் ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வைக் காண இங்கு சொடுக்கவும் #AppleHighlights