உலக காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று ஸ்பைடர்-மேன். இந்தக் கதாபாத்திரத்தை முன்வைத்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், Miles Morales என்று பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்பைடர் மேன் வீடியோ கேமின் முன்பதிவு தொடங்கப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் நவம்பர் 12ஆம் தேதி முதல் இந்த வீடியோ கேமின் முன்பதிவு தொடங்கப்படுகிறது. இத்தகவலை Miles Morales வீடியோ கேமை உருவாக்கிய Insomniac Games நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த வீடியோ கேமை பிளேஸ்டேஷன் 4 மற்றும் ப்ளே ஸ்டேஷன் 5 ஆகியவற்றில் விளையாட முடியும்.