இப்போதெல்லாம் இவை இல்லாமல் நாம் இல்லை, இவைகளின் துணையுடன்தான் நம் சுக🤣, துக்கங்களை😭 சமூக வலைத்தளங்களில் பகிர்கிறோம். அவைதான் எமோஜி 👣.
இப்படி நம்முடைய மகிழ்ச்சி, கவலையுடன் பங்குபோடும் எமோஜிக்கு என்று ஒரு தினம் வேண்டாமா?
அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் உலக எமோஜி தினம். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
முதலில் தொலைபேசிகளிலும், சமூக ஊடக தளங்களிலும் தோன்றிய எமோஜிகள் தன்னிச்சையானவையாக இல்லாமல், 1995ஆம் ஆண்டும் முதல் யூனிகோட் கூட்டமைப்பால் 76 எமோஜிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பின்னர் 2000ஆம் ஆண்டில் 78 எமோஜிகள், 2002ஆம் ஆண்டில் 86 எமோஜிகள் என 2019ஆம் ஆண்டில் 3,019 எமோஜிகளாக மாறின. மேலும், மார்ச் 2020 நிலவரப்படி யூனிகோட் ஸ்டாண்டர்டில் 3,304 எமோஜிகள் உள்ளன.
இதில் ஆனந்த கண்ணீர் விடும் எமோஜி, சிவப்பு இதயம், இதய கண்கள் கொண்ட எமோஜி உள்ளிட்டவை மிக பிரபலமானவையாக உள்ளன.
ஒவ்வொரு நாளும் 500 பில்லியனுக்கும் அதிகமான எமோஜிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. அதுமட்டுமின்றி 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் தங்கள் அனுப்பும் செய்திகளில் எமோஜிகளையே பயன்படுத்துகின்றனர்.
2015ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு அகராதி கணக்கெடுப்பின்படி, ஆண்டின் பிரபலமான எமோஜி என ஆனந்த கண்ணீர் விடும் எமோஜியைக் குறிப்பிட்டது.
ட்விட்டரில் அதிகமாக பயன்படுத்தபடும் எமோஜி வரிசையில் ஆனந்த கண்ணீர் விடும் எமோஜி, சிரிக்கும் முகம், சுத்தப்படுத்தப்பட்ட முகம் ஆகியவை இடம்பிடித்தன. ஆனால் இன்ஸ்டாகிராமில் இதய எமோஜியே இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் இதயத்தில் உள்ளது என புலனானது.
சரி இந்த ஆண்டுக்கு வருவோம். இந்தாண்டு 110க்கும் மேற்பட்ட புதிய எமோஜிகள் வரவுள்ளன. அவை,
- நுரை தேனீர் (Bubble tea)
- பாட்டிலில் பால்கொடுக்கும் பெற்றோர்
- பாலின-நடுநிலை எழுத்துக்கள்
- புதிய விலங்குகள்
- திருநங்கைகளின் கொடி, என பல சமூக சமன்பாடுகளை ஏற்படுத்தும் வண்ணம் இந்தாண்டு எமோஜிகள் இறங்கவுள்ளன. இது வெறுமனே பயனாளர்களால் அனுப்பப்படும் எமோஜிக்களாக இல்லாமல் அந்த சமூக சமநிலைகளோடு அனுகுவோமே...!
இதையும் படிங்க....இந்தியனாக தலை நிமிருங்கள்: ஜியோ தருகிறது முற்றிலும் இந்திய தயாரிப்பு தகவல் சாதனங்கள்!