ETV Bharat / science-and-technology

சந்திரயான்-2 ரோவர் அசைவுகளைக் கண்டறிந்த தமிழ்நாடு டெக்கி! - chandrayaan 2 next movements

இஸ்ரோ உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்து, சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. கடைசி நேரத்தில் கட்டுப்பாடு அறையுடன் தொடர்பை துண்டித்த விண்கலத்தை குறித்து நாசாவும், இஸ்ரோவும் ஆய்வு நடத்தி வரும் நிலையில், விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருப்பதற்கான ஆதாரங்களை சென்னை பொறியாளர் வெளியிட்டுள்ளார்.

சண்முக சுப்பிரமணியன்
சண்முக சுப்பிரமணியன்
author img

By

Published : Aug 3, 2020, 1:26 PM IST

Updated : Feb 16, 2021, 7:31 PM IST

சென்னை: நிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் கிடப்பதாக சென்னையைச் சேர்ந்த பொறியாளர் கண்டுபிடித்து இஸ்ரோ, நாசாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய முடிவு செய்தது. இதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ரூ.978 கோடி செலவில் வடிவமைத்தது. இதனை ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 2ஆவது ஏவுதளத்திலிருந்து 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்.3 ஏவூர்தி மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவில் தரையிறங்குகிறது இஸ்ரோவின் பாகுபலி 'சந்திரயான்-2'!

நிலவில் தரையிறங்கி சோதனை செய்ய சந்திரயான்-2 விண்கலத்தில் விக்ரம் லேண்ட் ரோவர் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து 48 நாட்கள் பயணம் முடிந்து 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி நிலவின் தரையில் இருந்து 2 கிலோ மீட்டர் உயரத்தில் தரையிறங்க முயற்சித்த போது, இஸ்ரோ ஆய்வகத்தின் உடனான தகவல் தொடர்பை துண்டித்தது . நிலவின் தென் துருவத்தை தொடுவதற்குச் சற்று முன்பு நிலவின் தரையில் இருந்து 2 கிலோ மீட்டரில் சந்திரயான்-2, விக்ரம் லேண்டருடன் தொடர்பை இழந்தது.

Chandrayaan 2 rover
சண்முக சுப்பிரமணியன் ட்வீட்

இவ்வேளையில் நிலவில் விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வைத் தொடங்கினார்கள். அமெரிக்காவின் விண்வெளித்துறையான நாசா சில புகைப்படங்களை 2019ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எடுத்து வெளியிட்டது. இந்த புகைப்படங்களை ஆய்வுசெய்த சென்னையைச் சேர்ந்த பொறியாளரான சண்முக சுப்பிரமணியன், நிலவில் விக்ரம் லேண்டரின் துகள்கள் கிடப்பதைக் கண்டுபிடித்து இஸ்ரோவுக்கும், நாசாவுக்கும் தகவல் தெரிவித்தார். இதனை ஏற்று அவரை 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாசா பாராட்டியது.

Chandrayaan 2 rover
நாசா வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்

தற்போது ஜனவரி மாதம் நிலவில் எடுத்த சில புகைப்படங்களை நாசா மே மாதம் வெளியிட்டது. இந்த புகைப்படங்களுடன், 2019ஆம் ஆண்டு வெளியான புகைப்படங்களையும் ஒப்பிட்டு சண்முக சுப்பிரமணியன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தகவல்களை இஸ்ரோவுக்கும், நாசாவுக்கும் மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பியுள்ளார்.

சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக விஞ்ஞானி வீரமுத்துவேல் நியமனம்!

அதில், சந்திரயான்-2இன் ரோவர் நிலவின் மேற்பரப்பில் அப்படியே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடினமான தரையிறக்கம் காரணமாக அதன் உதிரி பாகங்கள் சிதைந்ததுடன், விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் உருண்டு, சில மீட்டர் தூரத்தில் கிடப்பதாகக் கூறியுள்ளார். இதனை இஸ்ரோவும், நாசாவும் முறையாக உறுதிப்படுத்த வேண்டும். நிலவின் மேற்பரப்பில் ஒரு வெற்றிகரமான மென்மையான தரையிறக்கம் ஏற்பட்டு இருந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு இந்தியா இந்த சாதனையை அடைந்திருக்கும் என்று சண்முக சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Last Updated : Feb 16, 2021, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.