வாஷிங்டன்: நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தனது முதல் பாறை துகள் மாதிரிகளை வெற்றிகரமாகச் சேகரித்துள்ளது. இதன் காரணமாக, இப்பகுதியில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 6ஆம் தேதி 'மான்டெனியர்' (Montdenier) என்று பெயரிடப்பட்ட அதன் முதல் மாதிரியை ரோவர் சேகரித்தது. அதன்பின்னர், செப்டம்பர் 8ஆம் தேதி மொன்டாக்னாக் (Montagnac) என்ற இரண்டாவது மாதிரியைச் சேகரித்துள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாதிரிகளின் பகுப்பாய்வு, ரோவரின் முந்தைய கால மாதிரிகளின் பகுப்பாய்வுத் தரவுகளை மதிப்பிட உதவும்.
மேலும், இதன்மூலம் அப்பகுதியில் எரிமலை செயல்பாடு அல்லது நிலையான நீர்த்தன்மை தென்பட்டதா என்பது கண்டறிய திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய சாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வக அறிவியலாளர் கென் பார்லி, "சேகரிக்கப்பட்டுள்ள பாறை மாதிரிகள் அங்கு வாழக்கூடிய நிலையான சூழலை வெளிப்படுத்துவதுபோல் தெரிகிறது. நீர் அங்கு நீண்ட காலம் இருந்தது என்பது பெரிய விஷயம்" என்றார்.
இந்த ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேடர் என்கிற இடத்தில் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு குட்பை சொன்ன ஃபோர்டு - 4000 தொழிலாளர்களின் கதி என்ன?