ETV Bharat / science-and-technology

மார்சில் வெற்றிகரமாகச் சோதனை ஓட்டத்தை முடித்த நாசாவின் ரோவர் - நாசா ரோவர்

வாஷிங்டன்: நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தனது சோதனை ஓட்டத்தை முடித்துள்ளது.

nasa
நாசாவின் ரோவர்
author img

By

Published : Mar 6, 2021, 5:06 PM IST

நாசா சமீபத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய பெர்சிவரன்ஸ் ரோவர் (perseverance rover), தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக இன்று (மார்ச்.6) முடித்துள்ளது. இச்சோதனை செவ்வாய் நிலப்பரப்பில் சுமார் 6.5 மீட்டர் தூரத்தில் நடைபெற்றது. சுமார் 33 நிமிடங்கள் நடந்த சோதனையில், ரோவர் நான்கு மீட்டர் முன்னோக்கி நகர்ந்துள்ளது.

அதே போல, ரோவரை இடதுபுறம் 150 டிகிரிக்கு திருப்பி, புதிய இடத்தில் தற்காலிகமாக மையம் கொண்டுள்ளது. இந்த இடத்தை ஆக்டேவியா ஈ. பட்லர் லேண்டிங் (Octavia E. Butler Landing) எனக் குறிப்பிடுகின்றனர். நாசாவின் கூற்றுப்படி, ரோவரின் ஒவ்வொரு சாதனங்களையும் சரிபார்க்கவே இச்சோதனை நடத்தப்பட்டது. விரைவில், ரோவர் தனது பணியை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

nasa
நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர்

கடந்தாண்டு ஜூலை 30ஆம் தேதி புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் தளத்திலிருந்து பெர்சிவரன்ஸ் ரோவர் விண்ணிற்குச் செலுத்தப்பட்டது. சுமார் 203 நாள்கள் பயணத்திற்குப் பிறகு, பிப்ரவரி 18ஆம் தேதியன்று இது வெற்றிகரமாக தரையிறங்கியது. அன்று முதலே, பல்வேறு சோதனைகளை நாசா செய்து வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் புவியியல், முந்தைய காலநிலையை மதிப்பீடு செய்தல், மனிதர்கள் ஆய்வு செய்வதற்கான முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து கண்டறிய இந்த ரோவர் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் முதல் பணியாக, செவ்வாய் கிரகத்தின் பாறைகள், மணலை சேகரித்து ஆய்வு செய்கிறது.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் பாதித்த லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்தில் வறுமை அதிகரிப்பு- ஐநா அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.