மாஸ்கோ: சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள பிரச்சினைகளைக் களைய ரஷ்யாவுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் உதவுவதாக உறுதி அளித்திருக்கிறது. ரஷ்ய விண்வெளி வீரர்கள், கடந்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஜாரியா பகுதியில் விரிசல்களைக் கண்டறிந்து, அவை விரிவடையத் தொடங்கும் என்று எச்சரித்தனர்.
இதற்கு உதவும்விதமாக நாசாவின் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பால் ஹில், லாங்லி ஆராய்ச்சி மையம், போயிங் நிறுவனம் ஆகியவற்றுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், இந்தக் குழு தற்போது விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்பட்டுள்ள விரிசலைச் சரிசெய்ய பொறியியல் பகுப்பாய்வுகள் நடத்தப்படும் என்று பால் ஹில் கூறினார்.
இவை வெல்டிங்கினால் ஏற்பட்ட குறைகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உயர் அழுத்தம் கொண்ட வைப்ரேட்டர்களைக் கொண்டு, காற்று கசிவைக் கண்டறிய இருப்பதாக ரஷ்ய விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தன்பாலின திருமணத்திற்கு சுவிட்சர்லாந்து ஒப்புதல்