சர்வதேச அளவில் மிகப் பிரபலமாக உள்ள கணினி இயங்குதளம் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ். சர்வதேச அளவில் சுமார் 77 விழுக்காடு கணினிகளில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்தான் இயங்குதளமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதள வரிசையில் இறுதியாக வெளியானது விண்டோஸ் 10. 2015ஆம் ஆண்டு வெளியான இந்த இயங்குதளத்திற்கு மைக்ரோசாஃப்ட் சார்பில் அவ்வப்போது அப்டேட்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி கடைசியாகக் கடந்தாண்டு நவம்பர் மாதம் விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு அப்டேட் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கோவிட்-19 தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் அடுத்த அப்டேட் வெளியாகத் தாமதம் ஆகலாம் என்ற தகவல் வெளியானது. இருப்பினும், புதிய அப்டேட் தற்போது சோதனை முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியில் வெளியிடப்பட்டுள்ள இந்த அப்டேட்டிலுள்ள சிறு சிறு குறைகள் நீக்கப்பட்டு, மே மாதம் இந்த அப்டேட் அனைத்து பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 9 லட்சம் முகக்கவசங்களை வழங்கிய விவோ!