கரோனா பரவல் என்பது மக்கள் வேலை செய்யும் முறையையே முற்றிலும் மாற்றியுள்ளது. கரோனாவுக்கு முன்பு வரை ஸ்மார்ட்போன்களே நமது பெரும்பாலான பணிகளை செய்துவிடும் என்பதால் யாரும் லேப்டாப்களை வாங்குவது குறித்து பெரிதாக சிந்திக்கவில்லை.
ஆனால், இந்த கரோனா பரவலும் இதனால் அதிகரித்த வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையும் (work from home) மக்களை லேப்டாப்களை நோக்கி திருப்பியுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பல நிறுவனங்களும் புதிய லேப்டாப் மாடல்களை வெளியிட்டுவருகின்றன.
இந்நிலையில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான நோக்கியா ப்யூர்புக் X14 என்ற புதிய லேப்டாப்பை 59,999 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
நோக்கியா ப்யூர்புக் X14 சிறப்பம்சங்கள் :
- 14 இன்ச் 1080 டிஸ்ப்ளே
- Intel Core i5 10th Gen பிராசஸர்
- 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி SSD ஸ்டோரேஜ்
- 1.1 கிலோ எடை
- சுமார் எட்டு மணி நேரம் வரை நீடிக்கும் பேட்டரி வசதி
- 65W ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
கருப்பு நிறத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த லேப்டாப் 59,990 ரூபாய்க்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும்.
இதையும் படிங்க: 2020இல் வெளிவந்த வீட்டை ஸ்மார்ட்டாக்கும் அட்டகாசமான கருவிகள்