ஸ்மார்ட்போன் துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் சியோமி நிறுவனம், தனது அடுத்த முயற்சியாக புதிய எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நோட்புக்கை ரூ. 34,999க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதன் விற்பனை அமேசான் மற்றும் எம்ஐ வலைதளங்களிலும், ஸ்டோர்களிலும் நடைபெறும்.
இது குறித்து எம்ஐ இந்தியாவின் தலைமை வணிக அலுவலர் ரகு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் தயாரிப்புகளை விரிவுபடுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது, வீட்டிலிருந்து கல்வி கற்பவர்கள் மீதும், வேலை செய்பவர்கள் மீதும் கவனம் செலுத்துகிறோம். மி நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் இளம் தொழில் வல்லுநர்களுக்கும், மாணவர்களுக்கும் சரியான சாதனமாகும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் சிறப்பு அம்சங்கள்:
- 14 இன்ச் 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே
- 2.1 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3-10110யு பிராசஸர்
- விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
- 8ஜிபி DDR4 2666MHz ரேம்
- 256ஜிபி SATA எஸ்எஸ்டி
- இன்டெல் UHD கிராபிக்ஸ் 620
- இன் பில்ட் ஹெச்டி வெப்கேமரா
- வைபை, ப்ளூடூத் 5
- 2 x யுஎஸ்பி 3.1, 1 x யுஎஸ்பி 2.0, 1 x ஹெச்டிஎம்ஐ 1.4b
- 3.5எம்எம் ஹெட்போன் / மைக்ரோபோன் ஜாக்
- 46 வாட் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி