உலகில் தலை சிறந்த நிறுவனமான ஆப்பிள், மடிகணினியில் புதிய வகை விசைப்பலகையை வெளியிடயுள்ளது. இதை ஆங்கிலத்தில் சிசர் மெக்கானிசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிசர் மெக்கானிசம் புதிதாக உருவாக்கப்பட்ட பதினாறு இன்ச் மேக்புக் ப்ரோயில் பயன்படும் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங் குவோ தெரிவித்துள்ளார்.
மேலும் இது முந்தைய பட்டர்பிளை மெக்கானிசம் போல் இல்லாமல் எளிதில் பயன்படும் வண்ணமாக இருக்கும் என்றும், வெப்பம் தூசி மூலமாக ஏற்படும் தாக்கம் இதில் குறைவு என்றும் கூறினார். இந்த சிசர் மெக்கானிசத்தில் பைபர் போன்ற ஒரு புதிய நெழிகி பயன்படுத்துவதால் இது எழுதில் உடையாது.