ETV Bharat / science-and-technology

அனுப்பப்பட்ட மெயிலை Undo செய்வது எப்படி.? அட்டாச்மென்டை செய்ய மறந்தாலும் மாற்றலாம்.. புதிய டிப்ஸ்.. - Gmail tips and tricks

கூகுள் ஜிமெயிலில் தவறாக அனுப்பப்பட்ட மெயிலையோ அல்லது அட்டாச்மென்டை ஆட் செய்ய மறந்துவிட்டு அனுப்பட்ட மெயிலையோ எளிதில் Undo செய்து விட்டு மீண்டும் சரிபார்த்து அனுப்பிவிட முடியும். இந்த டிப்ஸ் பலருக்கு உதவியாக இருக்கும். இதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கூகுள் ஜிமெயில்
கூகுள் ஜிமெயில்
author img

By

Published : Mar 20, 2023, 6:54 PM IST

ஹைதராபாத்: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனம் பல்வேறு செயலிகளை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல ஜிமெயில் என்னும் இலவச மின்னஞ்சல் சேவையையும் வழங்கி வருகிறது. இந்த ஜிமெயில் கணக்கை உலகளவில் 1.5 பில்லியன் மக்கள் வைத்துள்ளனர்.

இந்தியாவில் மட்டும் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன்கள் தொடங்கி ஆப்ஸ்கள் பயன்பாடு, போட்டி தேர்வுகள், வேலை வாய்ப்புகள், வங்கி கணக்குகள் வரை பல தரப்பட்ட சேவைகளுக்கு ஜிமெயில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிமெயிலை அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஜிமெயில் மூலம் ஒரு மின்னஞ்சலை கம்போஸ் செய்து அனுப்பவது மிக மிக எளிதானது. நீங்கள் மின்னஞ்சலில் உள்ளீடு செய்யும் தரவுகள் அனைத்தும் சரியானதாக இருக்கும் பட்சத்தில் அனுப்பிய பின் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது கிடையாது.

ஆனால், மின்னஞ்சல் தவறான நபருக்கு அனுப்பப்பட்டிருந்தாலோ, தவறாக வார்த்தைகள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது அட்டாச்மென்ட் பைல்களை ஆட் செய்ய மறந்துவிட்டு அனுப்பப்பட்டிருந்தாலோ அது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க ஜிமெயிலில் Undo Option உள்ளது. நம்மில் பெரும்பாலானோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த Option மூலம் நொடிகளில் அனுப்பப்பட்ட தவறான மின்னஞ்சலை ரீ-கம்போஸ் செய்து கொள்ளலாம் அல்லது அனுப்பாமல் தவிர்த்து விடலாம்.

Undo Send Option: முதலில் ஜிமெயிலை ஓப்பன் செய்து Settings டேபை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் மேலே தோன்றும் All Settings டேபை கிளிக் செய்ய வேண்டும். அதில் General டேபுக்கு கீழே Undo Send என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் 5, 10, 20, 30 என்று நொடிகளில் வகைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, நீங்கள் அனுப்பிய தவறான மின்னஞ்சலை 5 நொடிகள் முதல் 30 நொடிகள் வரை Undo Send செய்து கொள்ளலாம் என்பதை அது குறிக்கிறது. இந்த Undo Send செட் செய்யப்பட்ட உடன் Save changes-யை மறக்காமல் கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பின் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது பாப்-அப் தோன்றும் அதில் Message sent" "Undo" or "View message" என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் மின்னஞ்சலை சரிபார்த்து கொள்ளலாம். அப்போது தவறு இருப்பதை கண்டறியும் பட்சத்தில் நீங்கள் மேற்கூறிய நொடிகளுக்குள் Undo கிளிக் செய்தால் மின்னஞ்சலை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அப்போது மின்னஞ்சல் உங்களது Outbox சென்றுவிடும். அதன்பின் நீங்கள் சரி செய்துவிட்டு மீண்டும் அனுப்பலாம். இந்த சேவை அதிகபட்சமாக 30 நொடிகளில் வழங்கப்படுவதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: கோடைக் காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க 5 டிப்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.