ETV Bharat / science-and-technology

ஜாப்ரா எலைட் 85டி இந்தியாவில் அறிமுகம்!

author img

By

Published : Dec 3, 2020, 10:09 PM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

ஜாப்ரா நிறுவனம் இந்திய சந்தையில் உயர்தர தகவல் சாதன பயனர்களுக்காக புதிய இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ஜாப்ரா எலைட் 85டி, இந்தியாவில் ரூ.18,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Jabra Elite 85t tamil review
Jabra Elite 85t tamil review

டெல்லி: ஜாப்ரா நிறுவனத்தின் எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய இயர்பட்ஸ் மாற்றங்கள் செய்யக்கூடிய ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இவை தலைசிறந்த ஒலி அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.

இந்த இயர்பட்ஸ் கியூஐ சான்று பெற்ற வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. புதிய இயர்பட் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 5.5 மணி நேர மின்கல சேமிப்புத் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் இத்துடன் வழங்கப்படும் மின்னூட்டம் செய்யப்படும் பெட்டியில் 25 மணி நேர வரை மின்சாரத்தை சேமித்து வைக்கமுடியும்.

செமி ஓபன் டிசைன் கொண்டிருக்கும் இந்த இயர்போட்களில், 12 எம்எம் ஒலிப்பெருக்கிகள் வழங்கப்பட்டிருகின்றன. இதன் வடிவமைப்பு காதுகளில் இதமான அனுபவத்தை வழங்குகின்றன. இதன் வடிவம் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள பிரத்யேக நாய்ஸ் கேன்சலேஷன் சிப் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் வசதியினை வழங்குகிறது. இதில் உள்ள இயர்போட் வழியாக கேட்கும் அமைப்பைக் (HearThrough Mode) கொண்டு வெளிப்புற சத்தத்தை இயர்பட்கள் வழியே கேட்க முடியும்.

இந்திய சந்தையில் ஜாப்ரா எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டைட்டானியம் கறுப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்த தகவல் சாதனத்தை அமேசான் தளத்திலிருந்து பயனர்கள் வாங்கிக்கொள்ளலாம்.

Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.