டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதால் அதற்கு மாற்று செயலியை இந்தியர்கள் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.குறிப்பாக இந்திய செயலிகளான சிங்காரி, ரோப்ஸோ, மிட்ரான், மோஜ் உள்ளிட்ட செயலிகள் இருந்தாலும் டிக் டாக் அளவிற்கு அவை இல்லை என பயனர்கள் கருதுகின்றனர்.
இச்சூழலில், டிக் டாக்கிற்கு மாற்றாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவை சோதனையின் அடிப்படையில் இந்தியாவில் இன்று (ஜூலை 8) 7.30 மணியளவில் அறிமுகமானதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு செய்யப்படுகின்ற பெரும்பாலான வீடியோக்கள் 15 விநாடிகளுக்கு குறைவாக உள்ள குறுகிய வீடியோவாக அமைந்துள்ளது.
தற்போது இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இந்த சேவை மூலம் பயனர்கள் டிக் டாக்கை போன்று தங்களுக்கான குறுகிய வடிவ வீடியோக்களை உருவாக்கிக் கொள்ளலாம்.பயனர்கள் இந்த சேவையை பெற இன்ஸ்டாகிராம் கேமராவில் உள்ள உள்ள ரீல்ஸ் சேவையை தேர்வு செய்து தங்களது குறுகிய வீடியோக்களை பதிவு செய்து கொள்ளலாம்.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் பல்வேறு டிக்டாக் பிரபலங்கள் இந்த சேவையை பயன்படுத்தவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஸ்டாகிராம் ரயில் சேவையை பிரேசில், ஜெர்மனி பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்தியா நான்காவது நாடாக இதில் இணைந்துள்ளது.