ETV Bharat / science-and-technology

குழந்தைகளின் செவித்திறனைப் பாதிக்கும் ஹெட்போன், இயர்பட் - அதிர்ச்சித் தகவல் - Headphones, earbuds may affect hearing in children

குழந்தைகள் ஹெட்போன்கள், இயர்பட்களில் பாடல் கேட்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

hearing in children
குழந்தைகள்
author img

By

Published : Jun 15, 2021, 9:19 AM IST

நியூயார்க்: ஹெட்போன்கள், இயர்பட்களை குழந்தைகள் அதிகளவில் பயன்படுத்துவது, செவித்திறனைக் கடுமையாகப் பாதிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

நாள்தோறும் குழந்தைகளும், இளைஞர்களும் பல மணி நேரம் பாட்டுக் கேட்பதில் நேரத்தைச் செலவிட்டுவருகின்றனர். அவர்கள், உலகளவில் பரிந்துரைக்கப்பட்ட பொதுச் சுகாதார வரம்பான 70 டெசிபல்களைத் தாண்டி அதிகளவில் இசை கேட்பதாகக் கூறப்படுகிறது.

தனிப்பட்ட ஆடியோ சாதனங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு 50 விழுக்காட்டிற்கு மேல் சத்தம் வைத்து பாட்டுக் கேட்டால் அதிக பாதிப்பு ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். 85 டெசிபல்களில் பாட்டுக் கேட்பது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஆபத்தாக மாறக்கூடும் எனத் கூறப்படுகிறது.

குழந்தைகளின் செவிவழி முறை முழுமையாக முதிர்ச்சி அடையாததால், அதிக டெசிபல்களில் ஹெட்போன், இயர்பட்-களில் பாட்டுக் கேட்பது பெரும் ஆபத்தாக அமையும் என வல்லுநர்களின் கூற்றாக உள்ளது.

இதையும் படிங்க: 6 முதல் 12 வயது சிறார்களுக்கு கோவேக்ஸின் பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.