பரீட்சார்த்தமான இந்த முயற்சி பலனளித்தால் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு உணவு, மருந்துகளை வழங்க இந்த ரோபோவை மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்த முடியும்.
இதனால் மருத்துவமனை ஊழியர்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு குறையும். அதற்காக செவிலியர்கள், முகக் கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
எஸ்.எம்.எஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் டி. எஸ். மீனா கூறுகையில், ஒரு தனியார் நிறுவனம் தங்களை அணுகி, செலியர்களுக்குப் பதிலாக நோயாளிகளுக்கு உணவு, மருந்துகளை எடுத்துச் சென்று வழங்க ஒரு ரோபோவை வழங்குவதாக தெரிவித்தது என்றார். மேலும் அவர் கூறுகையில் "நாங்கள் ஒரு சோதனை முயற்சியாக இதனை செயல்படுத்தியுள்ளோம், ரோபோவின் செயல்திறனை அறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, அந்தக் குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும்" என்றார்.
![Coronavirus: robot alternate for nurses in hospital](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/robot-2_3003newsroom_1585552414_390.jpg)
கிளப் ஃபர்ஸ்ட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபோ உணவகங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டுள்ள ரோபோ செயற்கை நுண்ணறிவு (AI), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) ஆகிய தொழில்நுட்பங்கள் மூலம் செயல்படுகிறது. இதனை வடிவமைத்த புவனேஷ் மிஸ்ராவின் கூற்றுப்படி, தரையில் வரிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லாமல் அதன் சொந்த வழியில் செல்ல முடியும் என்றார்.
இந்த ரோபோ லிப்டைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வார்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட படுக்கையை மிச்சரியாக இனங்கண்டு செல்லும் என்றும் இதன் பேட்டரி சார்ஜ் குறைந்துவிட்டால் அது சார்ஜிங் செய்துகொள்ள மின் இணைப்பை நோக்கி தானாகவே சென்றுவிடும் வகையிலான தொழில்நுட்பத் திறன் கொண்டது என்றும் இதன் வடிவமைப்பாளர் கூறினார்.
![Coronavirus: robot alternate for nurses in hospital](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/robot_3003newsroom_1585552414_153.jpg)
இதை ஒரு நல்ல முன்னெடுப்பு என்ற டாக்டர் மீனா, மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் நினைவு கூர்ந்தார். மேலும் அவர், இந்த ஏற்பாடு செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
தொடர்ந்து கூறிய கிளப் ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் மிஸ்ரா, மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ தங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் (CSR) கீழ் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.